பட்டாசு வெடித்ததில் தகராறு.. பலத்த கண்காணிப்பில் கிராமம்.. காவல்துறை அதிரடி.!! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி மாநிலத்தில் உள்ள கிருமாம்பாக்கத்தை அடுத்துள்ள மதிகிருஷ்ணாபுரம் மற்றும் உச்சிமேடு கிராமங்கள் இருக்கிறது. இந்த கிராமத்திற்கு., அதாவது உச்சிமேடு கிராமத்திற்கு செல்வதற்கு மதிகிருஷ்ணாபுரம் வழியாக செல்ல வேண்டும் என்ற நிலையில்., இவர்களுக்குள் அவ்வப்போது பிரச்சனை ஏற்படுவது வழக்கமாக இருந்துள்ளது. 

இந்த தருணத்தில் தீபஒளித் திருநாள் கொண்டாடப்பட்டதை அடுத்து., மதிகிருஷ்ணாபுரம் பகுதியை சார்ந்த வாலிபர்கள் பட்டாசு வெடித்து கொண்டிருந்த சமயத்தில்., அது எதிர்பாராத விதமாக உச்சிமேடு கிராமத்தை சார்ந்த வாலிபர்களின் மீது பட்டுள்ளதாக  தெரியவருகிறது. 

இதனையடுத்து அவர்கள் வேண்டுமென்றே பட்டாசுகளை கொளுத்தி போட்டதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபடவே., இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றி இரு தரப்பினரும் கடுமையாக தாக்கிக் கொண்டுள்ளனர். இதனையடுத்து இந்த தகவலானது இரு கிராமத்துக்கு தெரியவரவே., கிராமத்தினர் பயங்கர ஆயுதங்களுடன் சென்று மோதிக்கொண்டுள்ளனர்.

இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர்., சம்பவ இடத்திற்கு விரைந்து மறியலில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தி கலைத்து விட்டு., அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தியுள்ளனர். இந்த மோதலின்போது மதி கிருஷ்ணாபுரம் பகுதியை சார்ந்த பிரகாஷ்., தங்கபாண்டியன்., சதீஷ்., மணிகண்டன் ஆகியோர் காயமடைந்துள்ளனர். 

இதனைப்போன்று உச்சிமேடு கிராமத்தை சார்ந்த சிலரும் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இவர்கள் அனைவரும் கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளதாக தெரியவருகிறது. இவர்கள் இருவருக்கும் இடையே மீண்டும் ஏதும் பிரச்சினைகள் வரலாம் என்ற பரபரப்பு நிலவுவதால்., காவல்துறையினர் அங்கு பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in puthuchery two villages fight celebrate deepawali festival crackers


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->