வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் குடிக்க தண்ணீர் வேண்டும் என்று கேட்டு., கொடூரத்தை அரங்கேற்றிய காம கொடூரன்.! இறுதியில் நேர்ந்த சோகம்.!!  - Seithipunal
Seithipunal


கடந்த சில வருடங்களாக பெண்களுக்கு எதிரான தொடர் அநீதிகள் பல தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளது. பெண்களுக்கு எதிரான பல பாலியல் குற்றசாட்டுகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில்., சிறுமிகளுக்கும் காம கொடூர எண்ணங்களை கொண்ட கயவர்களால் பல அநீதிகள் இழைக்கப்பட்டு வருவது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அபிஷேக்பாக்கத்தை சார்ந்தவர் வீரையன். இவரது மகனின் பெயர் வினோத் (வயது 26). இவர் அரசு மின் துறை ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் வீடுவீடாகச் சென்று மின்சாரம் கணக்கெடுக்கும் பணியாளராக பணியாற்றி வருகிறார். 

இந்த நிலையில் அங்குள்ள பாகூர் அருகே உள்ள கிராமத்தில் நேற்று வீடு வீடாகச் சென்று மின்சாரம் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில்., அந்தப் பகுதியில் உள்ள வீட்டில் ஒரு சிறுமி மட்டும் தனியாக இருந்ததை அறிந்துள்ளார். 

அந்த சிறுமி தற்போது நான்காம் வகுப்பு படித்து வரும் நிலையில் அவரது வீட்டிற்கு ரீடிங் எடுக்கச் சென்ற இவன்., சிறுமியிடம் குடிப்பதற்கு தண்ணீர் வேண்டும் என்று கேட்டுள்ளான். இதனைக் கேட்ட சிறுமி உடனடியாக வீட்டிற்குள் சென்று தண்ணீர் எடுக்கச் சென்றபோது., அவரை பின்தொடர்ந்து சென்ற கொடூரன் வினோத் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். 

இதனால் பயந்து போன சிறுமி அலறவே இதுகுறித்து யாரிடமும் கூறினால் கொலை செய்துவிடுவதாக மிரட்டி விட்டு சம்பவ இடத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளான்., இவரின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் பதறியபடி வந்து., விஷயத்தை கேட்டறிந்து பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். 

தனது பெற்றோர் வீட்டிற்கு வந்ததும் விஷயத்தை கூறி கதறி அழுத சிறுமியின் கதறலை கேட்டு அதிர்ச்சியான பெற்றோர்கள்., இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இவரின் புகாரை ஏற்ற காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு., மின்துறை ஊழியனான வினோத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

English Summary

in pondichery child rapped by govt employee police investigation going on


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal