பொள்ளாச்சி பிரச்சனையில்., இளம்பெண்களை ஆட்டோவில் கடத்தி இரவு முழுவதும்., கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிய கொடூரம்.!!  - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் பொள்ளாச்சியில் பணிக்கு மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் சுமார் 200 க்கும் மேற்பட்ட பெண்களை காதல் வலையில் விழ வைத்து., ஆபாச படமெடுத்து மிரட்டி நகை மற்றும் பணங்கள் பறித்தும்., பலாத்காரம் செய்ததும் தெரியவந்துள்ளது. இந்த குற்றத்தில் ஈடுபட்டதாக முதலில் சபரிராஜா., சதீஸ் மற்றும் வசந்தகுமார் என்பவர்களை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். 

இவர்களில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு., மணிவண்ணன்., சபரிராஜா., சதீஸ் மற்றும் வசந்தகுமார் ஆகியோரை கைது செய்து மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தது. மேலும்., இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் பல சர்ச்சையை ஏற்படுத்தும் ஆடியோ பதிவுகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில்., இந்த வழக்குதொடர்பான விசாரணையானது தற்போது சி.பி.சி.ஐ.டி காவல் துறையினர் வசத்தில் இருந்து சி.பி.ஐ காவல் துறையினர் விசாரணையின் கீழ் மாற்றம் செய்யப்பட்டு தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக வெளியான ஆடியோ குறித்த விசாரணையை எஸ்.பி.கலைமணி மேற்கொண்டு வருகிறார். 

இந்த வழக்கு தொடர்பான விசாரணையில்., திருநாவுக்கரசு வட்டிக்கு பணம் வழங்கி வந்த நிலையில்., இவன் பணம் வழங்கி வந்த குடும்பத்தார் யாரேனும் பாதிக்கப்பட்டு உள்ளார்களா? என்ற விசாரணையிலும்., பாதிக்கப்பட்ட பெண்கள் யாரேனும் தற்கொலை செய்து வழக்குகள் திசை மாற்றப்பட்டதா? என்ற கோணத்திலும் காவல் துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த நிலையில்., ஆட்டோவில் திருநாவுக்கரசு கும்பல் நள்ளிரவில் பெண்களை கடத்தி வந்து கற்பழித்ததாக பெரும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அப்பகுதி வாசிகள் தெரிவித்தாவது., கடந்த 2017-ஆம் வருடத்தில் அதிகாலை நேரத்தில் இரண்டு பெண்களை திருநாவுக்கரசு கும்பல் ஆட்டோவில் கடத்தி வந்து., இரவு முழுவதும் மிரட்டி அவர்களை பலாத்காரம் செய்துள்ளனர். 

இரவு முழுவதும் இரண்டு பெண்களின் வாழ்க்கையை சீரழித்து., அவர்களிடம் இருந்த பணம் மற்றும் நகைகளை பறித்து கொண்டு விட்டுள்ளனர். செய்வதறியாது நின்ற அந்த இளம் பெண்கள்., அப்பகுதி வாசிகளிடம்., சம்பவத்தை கூறி கதறியளவே., இவர்கள் மீது புகார் அளித்தாலும் காவல் துறையினர் கண்டு கொள்ளமாட்டார்கள்., காசு தருகிறோம் உங்களின் ஊருக்கு சென்று விடுங்கள் என்று அவர்களிடம் கூறி., ரூ.400-ஐ வழங்கியுள்ளனர். இந்த தகவலானது தற்போது வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in pollachi sexual harassment issue CBI investigation and local peoples tell about harassment


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->