இரண்டு போலி மருத்துவர்கள் அதிரடி கைது.! அதிர்ச்சியில் திகைத்த மக்கள்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி நாச்சிமுத்து கவுண்டர் வீதியில் பத்ரா (வயது 50) என்பவர் மருத்துவமனை நடத்தி வந்த நிலையில்., இந்த மருத்துவமனையில் தோல் நோய்கள் மற்றும் உயர் இரத்த அழுத்த நோய்களுக்கு சிகிச்சை அளிக்கபட்டு வந்தது. 

பத்ராவின் மருத்துவமனையில் மகாராஷ்டிரா மாநிலத்தை சார்ந்த சிரஞ்சீத் என்பவர் மூல நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில்., ரூ.20 ஆயிரத்தை பெற்றுக்கொண்டுள்ளது. இதற்கு பின்னர் சிகிச்சையளித்து முடிந்தவுடன் தனது சொந்த ஊருக்கு சென்று நிலையில்., இவரின் உடல் நலமானது மோசமான நிலையில் பாதிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து சிரஞ்சீத்தின் உறவினர் மருத்துவராக இருக்கும் நிலையில்., அவருக்கு தேவையான சிகிச்சையை அளித்துவிட்டு., கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு வருகை தந்து மாவட்ட ஆட்சியர் மற்றும் சுகாதார துறை இணை இயக்குனரிடமும் புகார் அளித்துள்ளார். இவரது புகாரின் பேரில் அதிகாரிகள் பத்ராவின் கிளினிக்கிற்கு சென்று சோதனை செய்தனர். 

இந்த சோதனையில்., மருத்துவராக இருந்து வரும் பத்ரா மருத்துவம் படித்ததற்கான ஆவணங்கள் இல்லாத நிலையில்., 12 ஆம் வகுப்பு பயின்றுவிட்டு., கடந்த 20 வருடங்களாக மருத்துவராக பணியாற்றி வந்ததும் தெரியவந்ததை அடுத்து பத்ராவின் கிளினிக்கிற்கு சீல் வைத்து பத்ராவை கைது செய்தனர். இதனைப்போன்று பொள்ளாச்சியில் உள்ள திருநீலகண்டர் வீதியில் இராமச்சந்திரன் (வயது 58) என்பவர் கிட்னி மற்றும் கேன்சர் ஆராய்ச்சி மையத்தினை வைத்து நடத்தி வந்துள்ளார். 

இந்த சமயத்தில்., ராமச்சந்திரன் 9 ஆம் வகுப்பு மட்டுமே பயின்றுள்ளதும்., ஆயுர்வேத சித்தவர்ம குருகுலம் என்ற பெயரில் மக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்துள்ளது. அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் ராமச்சந்திரனையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in pollachi fake doctor arrest by health department


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->