பொள்ளாச்சி வழக்கு தொடர்பான விசாரணையில்., சி.பி.சி.ஐ.டியின் அடுத்தகட்ட நடவடிக்கை.! வெளியான பரபரப்பு தகவல்.!!  - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் பொள்ளாச்சியில் பணிக்கு மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் சுமார் 200 க்கும் மேற்பட்ட பெண்களை காதல் வலையில் விழ வைத்து., ஆபாச படமெடுத்து மிரட்டி நகை மற்றும் பணங்கள் பறித்தும்., பலாத்காரம் செய்ததும் தெரியவந்துள்ளது. இந்த குற்றத்தில் ஈடுபட்டதாக முதலில் சபரிராஜா., சதீஸ் மற்றும் வசந்தகுமார் என்பவர்களை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். 

இவர்களில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு என்பவன் தலைமறைவாகவே., கைதானவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு., திருநாவுக்கரசை தேடி வந்தனர். கடந்த மாதத்தின் 5 ம் தேதியன்று திருநாவுக்கரசை அதிரடியாக கைது செய்த காவல் துறையினர்., திருநாவுக்கரசிடம் மேற்கொண்ட விசாரணையில் பல அதிர்ச்சி சம்பவங்கள் தொடர்ந்து வெளியானது. கல்லூரியில் பயிலும் காலத்தில் இருந்து தன்னுடன் பயிலும் சக மாணவிகளை மயக்கி பலாத்காரம் செய்தது தெரியவந்தது. 

இந்த விஷயம் தொடர்பான பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. மேலும்., அவர்களிடம் இருந்த காணொளி காட்சிகளில் மூன்று பதிவுகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   மேலும்., திருநாவுக்கரசு கல்லூரியில் பயிலும் காலத்தில் இருந்தே தன்னிடம் பயிலும் மாணவிகளை காதல் வலையில் விழ வைத்து ஆபாச படம் எடுத்ததும்., மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்துள்ளது.

இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி காவல் துறையினர் நடத்தி வந்த நிலையில்., பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனை தாக்கிய வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்., மணிவண்ணனும் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து மணிவண்ணனிடம் தீவிர விசாரணையை காவல் துறையினர் மேற்கொள்ள துவங்கினர். இவர்கள் ஐவரின் மீதும் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில்., பாதிக்கப்பட்ட சுமார் 10 மாணவிகளை நேரில் சந்தித்த நிலயில்., அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் புகார் அளிக்க மறுப்பு தெரிவித்ததை அடுத்து., இது குறித்த தகவல் அறிந்தவர்கள் புகார் அளிப்பதற்கு தொலைபேசி எண்ணை அறிவித்திருந்த நிலையில்., சுமார் 200 க்கும் மேற்பட்ட பெண்கள் புகார் அளித்திருந்த நிலையில்., 140 பெண்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

அவ்வாறு விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேலும் சிலர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில்., இந்த விவகாரம் தொடர்பான ஆடியோ பதிவுகள் வெளியாகி இணையத்தில் வைரலாகியது. கடந்த மாதத்தின் போது வெளியான ஆடியோ பதிவில் சுமார் எட்டு பேர் சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்ததாகவும்., அந்த உடலை திருநாவுக்கரசின் வீட்டிற்க்கு பின்புறத்தில் புதைக்கப்பட்டுள்ளதாகவும் இருந்தது. 

இந்த வீடியோ பதிவின் உண்மை தன்மையை கண்டறியும் பணியில் ஈடுபட துவங்கியுள்ள நிலையில்., இந்த ஆடியோ பதிவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டது யார் என்பது குறித்த தகவலை அறிய யூடுப் மற்றும் வாட்சாப் நிறுவனத்திற்கு கடிதம் வழங்கியிருந்த நிலையில்., எந்த விதமான பதிலும் பெறப்படாததை அடுத்து., குற்றப்பத்திரிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில்., மீண்டும் திருநாவுக்கரசின் இல்லத்தில் சோதனை மேற்கொள்ளப்படும் என்று சி.பி.சி.ஐ.டி காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in pollachi case issue CBCID investigation about release audio


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->