பொள்ளாச்சியில் அரங்கேறிய கொடூரங்கள்.! மற்றொரு கும்பலால் பாதிக்கப்பட்ட பெண் பரபரப்பு பேட்டி.!! வெளியான அடுத்த அதிர்ச்சி சம்பவம்.!! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் பொள்ளாச்சியில் பணிக்கு மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் சுமார் 200 க்கும் மேற்பட்ட பெண்களை காதல் வலையில் விழ வைத்து., ஆபாச படமெடுத்து மிரட்டி நகை மற்றும் பணங்கள் பறித்தும்., பலாத்காரம் செய்ததும் தெரியவந்துள்ளது. இந்த குற்றத்தில் ஈடுபட்டதாக முதலில் சபரிராஜா., சதீஸ் மற்றும் வசந்தகுமார் என்பவர்களை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். 

இவர்களில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு என்பவன் தலைமறைவாகவே., கைதானவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு., திருநாவுக்கரசை தேடி வந்தனர். கடந்த 5 ம் தேதியன்று திருநாவுக்கரசை அதிரடியாக கைது செய்த காவல் துறையினர்., திருநாவுக்கரசிடம் மேற்கொண்ட விசாரணையில் பல அதிர்ச்சி சம்பவங்கள் தொடர்ந்து வெளியானது. கல்லூரியில் பயிலும் காலத்தில் இருந்து தன்னுடன் பயிலும் சக மாணவிகளை மயக்கி பலாத்காரம் செய்தது தெரியவந்தது. 

இந்த விஷயம் தொடர்பான பல விஷயங்கள் தொடர்ந்து விசாரணையில் வெளிவரும் நிலையில்., பொள்ளாச்சி சினப்பம்பாளையத்தில் இருக்கும் திருநாவுக்கரசின் வீட்டின் அருகே உள்ள இருக்கும் நபர் இது குறித்து தெரிவித்த விஷயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழ்நிலையில் இதனை போன்றே பொள்ளாச்சியில் மற்றொரு சம்பவமும் அரங்கேறியது தற்போது வெளிவந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்தாவது., பொள்ளாச்சியை சார்ந்த எனக்கும் அவனுக்கும் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னதாக பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கமானது நாளடைவில் காதலாக மாறவே., கடந்த மூன்று வருடங்களாக காதலித்து வந்தோம். இந்த சூழ்நிலையில்., ஆசை வார்த்தையை கூறி பலவந்தப்படுத்தி ஆபாச புகைப்படங்கள் எடுத்து அதனை வைத்து என்னை மிரட்ட துவங்கினான். 

அந்த ஆபாச புகைப்படங்களை காண்பித்து அவனுக்கு தேவையான பணம் மற்றும் நகைகளை வாங்க துவங்கி., வீட்டிற்கு தேவையான பொருட்களையும் பெற துவங்கினான். மேலும்., பணத்தை வழங்காத பட்சத்தில்., புகைப்படத்தை வெளியிட்டு மானத்தை வாங்கிவிடுவேன் என்று மிரட்டினான். எனக்கு முன்னதாகவே பல பெண்கள் இவனிடம் சிக்கி தங்களின் வாழ்க்கையை துளைத்துள்ளனர். 

இவனுடன் என்னை கண்ட பெண்கள்., இவன் என்னை மிரட்டுவதை அறிந்து பேச துவங்கியதில் சுமார் 100 க்கும் மேற்பட்ட பெண்களின் வாழ்க்கையை சீரழித்தது தெரியவந்தது. மேலும்., இது குறித்து அனைவரும் சென்று புகார் வழங்குவோம் என்று பேச தொடங்கிய பட்சத்தில்., பலர் இந்த விஷயம் வெளிவந்தால் என் குடும்பமே தற்கொலை செய்து கொள்ளும் என்று கண்ணீர் விட்டு கதறியழுதனர்.  

என்னை சுமார் 15 பாதிக்கப்பட்ட பெண்கள் அழைத்து பேசிய நிலையில்., அவன் பணியாற்றும் நிறுவனத்தில் சுமார் 100 பெண்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும்., இவன் அரிசி கடத்தல்., கஞ்சா விற்பனை போன்ற செயல்களில் ஈடுபடும் இவனை கைது செய்யும் பட்சத்தில்., இது போன்ற பல்வேறு கும்பல்கள் குறித்த தகவல்கள் வெளியாகும். இந்த பிரச்சனையில் இருந்து ஒரு முடிவு தெரிவதற்கும்., என்னை போன்று பிற பெண்களும் இந்த பிரச்சனையில் இருந்து இனி பாதிக்கப்படாமல் இருப்பதற்கும் காவல் நிலையத்தில் நேற்று மாலை புகார் அளித்தேன். 

எனது புகாரை வாங்கி வைத்த காவல் துறையினர்., இது குறித்து ஏதும் பேசாமல் காத்திருக்க கூறினார். மேலும்., தற்போது வரை இது குறித்த எந்த விதமான நடவடிக்கையும் இல்லை. தற்போது கைதாகியுள்ள திருநாவுக்கரசு மற்றும் அவனது நண்பர்கள் சார்ந்த கும்பல் அந்த கும்பல் இல்லை என்றும்., வேறொரு கும்பல் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது என்று அந்த பெண் தெரிவித்துள்ளார். இந்த சம்பவமானது தற்போது வெளிவந்து பெரும் அதிர்வலையை மீண்டும் ஏற்படுத்தியுள்ளது. 

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in pollachi a next sexual harassment affair of love by another gang


கருத்துக் கணிப்பு

இந்தியா தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்ற போவது எப்படி?!
கருத்துக் கணிப்பு

இந்தியா தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்ற போவது எப்படி?!
Seithipunal