போட்டிபோட்டு வந்து விபத்தை ஏற்படுத்திய 15 கல்லூரி பேருந்தை, அடித்து நொறுக்கிய பொதுமக்கள்..! பெரம்பலூரில் தரமான சம்பவம்.!! - Seithipunal
Seithipunal


பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் தாலுகாவை அடுத்துள்ள சித்தளி கிராம பகுதியை சார்ந்த பள்ளி மாணவ - மாணவியர்கள் குன்னத்தில் உள்ள அரசு பள்ளியில் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச பயணசீட்டின் மூலமாக அரசு பேருந்தில் சென்று வருவதும் வழக்கமான ஒன்றாகும்.  

இந்த சமயத்தில்., வழக்கம்போல பள்ளிக்கு செல்வதற்காக அக்கிராமத்தில் இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் 12 மாணவிகள் பேருந்திற்காக காத்துகொண்டு இருந்த சமயத்தில்., அப்பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்வி நிறுவனத்தை சார்ந்த பொறியியல் பேருந்துகள் மற்றும் பள்ளி பேருந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டு இருந்தது. 

accident,

இந்த பேருந்து ஓட்டுநர்களுக்குள் இருந்த போட்டியின் காரணமாக அனைவரும் போட்டிபோட்டுக்கொண்டு வந்துகொண்டு இருந்த தருணத்தில்., பிற பேருந்தை முந்த முயற்சித்த ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து., அரசு பேருந்திற்காக காத்திருந்த மாணவிகள் அமர்ந்திருந்த விநாயகர் கோவில் அருகேயுள்ள மின் கம்பத்தில் மோதியுள்ளது.

இந்த விபத்தில் சுமார் 7 மாணவிகள் காயமடைந்த நிலையில்., பிற மாணவிகள் எந்தவிதமான காயமும் இன்றி தப்பித்தார். மேலும்., விபத்தை ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநர் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடவே., இந்த விபத்தை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் அவசர ஊர்தியின் மூலமாக அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

hospital,

இவர்களின் போட்டி சம்பவம் தொடர்ந்து அரங்கேறி ஆத்திரத்தில் இருந்த பொதுமக்கள் விபத்திற்குள்ளான பேருந்து மற்றும் பிற 2 பேருந்துகளில் இருந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை பேருந்தில் இருந்து இறக்கவிட்டு., பேருந்தை அடித்து நொறுக்கினர். மேலும்., அங்கிருந்த பள்ளத்தில் பேருந்தை தள்ளிவிட்டனர். இதனையடுத்து அந்த இடமே போர்க்களம் போல காட்சியளித்தது. 

இதுமட்டுமல்லாது அந்த வழியாக வந்த இதே கல்வி நிறுவனத்தை சார்ந்த 15 பேருந்துகளின் கண்ணாடியை அடித்து நொறுக்கினர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பேருந்து ஓட்டுனர்கள் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடினர். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர்., பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி., ஓட்டுநர்களை கைது செய்வதாக கூறியதை அடுத்து சம்பவ இடத்தில் இருந்து கலைந்து சென்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in perampalur college bus accident 7 girl students injured


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->