கள்ளக்காதல் ஜோடியின் பயணத்தை நிறைவு செய்ய பாம்பன் பாலம்.! கைகொடுத்த மீனவர்கள்., உறவினர்களுக்கு போன் போட்ட காவல் துறையினர்.!!  - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் உள்ள மீனாட்சிபுரம் பகுதியை சார்ந்தவர் கணேஷ் (வயது 30)., இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில்., இவர் தனது குடும்பத்துடன் மதுரையில் வசித்து வருகிறார். இவரது நண்பரான குமார் மதுரை அவனியாபுரம் பகுதியில் வசித்து வருகிறார். குமாரின் மனைவியின் பெயர் கலா (வயது 27). குமாருக்கும் அவரது மனைவியான கலாவிற்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது).

இந்த நிலையில்., தனது நண்பரான குமாரின் இல்லத்திற்கு அடிக்கடி சென்று வரும் பழக்கத்தை கணேஷ் வைத்துள்ளார். இந்த நேரத்தில்., குமாரின் மனைவியான கலாவிற்கும் - குமாரிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது இவர்களுக்குள் நாளடைவில் கள்ளக்காதலாக மாறவே., இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். குமாருக்கும் - கலாவிற்கும் இடையே உள்ள கள்ளக்காதல் தொடர்பானது அவர்களது உறவினர்களுக்கு தெரியவரவே., இவர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளனர். 

இவர்களின் திட்டப்படி கடந்த 27 ம் தேதியன்று குமார் மற்றும் கலா இருவரும் வீட்டை விட்டு வெளியேறி அங்குள்ள திண்டுக்கல்., சேலம் மற்றும் ஒகேனக்கல் பகுதிகளுக்கு சென்று உல்லாசம் அனுபவித்து வந்த நிலையில்., நேற்று காலையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இராமேசுவரத்திற்கு வருகை தந்துள்ளனர். இராமேசுவரத்தில் உள்ள தனியார் விடுதியில் அறையெடுத்து தங்கியிருந்து அங்குள்ள சுற்றுலா தளங்களை சுற்றிப்பார்த்து., பின்னர் உல்லாசம் அனுபவித்த பின்னர்., வீட்டிற்கு திரும்பும் எண்ணத்தில் இருந்துள்ளனர். 

இந்த நேரத்தில்., வீட்டிற்கு சென்றால் வரும் பிரச்சனையை எவ்வாறு எதிர்கொள்வது என்ற காரணத்தை யோசனை செய்த இருவரும்., அங்குள்ள பாம்பன் பாலத்திற்கு வருகை தந்து கடலில் குதித்து தற்கொலை செய்வதற்கு முடிவு செய்துள்ளனர். இவர்களின் திட்டப்படி பாலத்தில் ஏறிய குமார் கடலிற்குள் குதிக்கவே., பின்னால் நின்ற கலா பயத்தில் செய்வதறியாது திகைத்து நின்றுள்ளார். 

குமார் கடலில் குதித்ததை அடுத்து அதிர்ச்சியடைந்த கலா வழியில் வந்தவர்களை உதவிக்கு அழைக்கவே., இவர் குதிப்பதை கண்ட மீனவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு படகின் மூலமாக விரைந்து., உயிருக்கு போராடிய குமாரை மீட்டு கரைக்கு அழைத்து வந்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு அவர்களின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in pamban bridge a illegal affair couple try to attempt suicide


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->