2 ஏக்கர் அளவில் 5 அடி உள்வாங்கிய நிலம்.. நீலகிரியில் பேரதிர்ச்சி.!!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் தற்போது கனமழையானது பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆங்காங்கே கடுமையான வெள்ளப்பெருக்கானது ஏற்பட்டு வருகிறது. பெரும்பாலான மாவட்டங்களில் இருக்கும் ஏரிகள் அனைத்தும் அடுத்தடுத்து நிரம்பியுள்ளது. 

ஏரிகள்., அணைகள் என நீர் ஆதாரங்கள் அடுத்தடுத்து நிரம்பி உபரி நீரானது மக்களின் பயன்பாட்டிற்க்காகவும்., விவசாய தேவைக்காகவும் திறந்து விடப்பட்டுள்ளது. சமவெளிப்பகுதிகளில் ஏற்படும் மழை பாதிப்பை போல., மலை பகுதிகளிலும் சில பாதிப்புகள் ஏற்படும். 

அந்த வகையில்., தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் மற்றும் திண்டுக்கல்., தேனி மாவட்டங்களில் மழைக்காலத்தின் போது மண்சரிவு மற்றும் நிலச்சரிவு போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும். இந்த சமயங்களில் ஏற்படும் மண்சரிவின் காரணமாக அப்பகுதிகளுக்கு போக்குவரத்து துண்டிப்பு செய்யப்படும்.

nilgiris,

இந்த நிலையில்., நீலகிரி மாவட்டத்தில் உள்ள கீழ்கோத்தகிரி அருகேயுள்ள பகுதியில் பூமியானது ஐந்தடி அளவுக்கு திடீரென உள்வாங்கியுள்ளது. இதனால் பதறிப்போன மக்கள் செய்வதறியாது காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து சோதனை செய்த காவல் துறையினர்., மாவட்ட ஆட்சியருக்கு இது தொடர்பான தகவலை தெரியப்படுத்தினர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் மண்வள அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். 

இந்த சோதனையில் கீகோத்தகிரியில் இருந்து கரிக்கையூர் மலைக்கிராமம் செல்லும் வழியில் உள்ள தோட்டத்தில்., 2 ஏக்கர் பரப்பளவில் இவ்வாறாக பூமியில் 5 அடி பள்ளம் இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து., பள்ளத்திற்கான காரணம் குறித்து மண்வள அதிகாரிகள் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in nilgiris land getting down due to heavy rain


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->