ஐந்து நாட்களாய் ஆளையே காணவில்லை.. போனில் பேசிக்கொண்டே இருந்தாள்.. மனைவியை கொலை செய்த கணவனின் பகீர் வாக்குமூலம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பெரியப்பட்டி பகுதியை சார்ந்தவர் பரமானந்தம் (வயது 59). இவர் லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியின் பெயர் மயிலாத்தா (வயது 45). பரமானந்தம் நேற்று அதிகாலை நேரத்தில் மனைவியை கட்டையால் கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளார்.

இதனையடுத்து இது தொடர்பான விபரம் காவல் துறையினருக்கு தெரியவரவே, இதனை அறிந்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பரமானந்தத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விசாரணையில் கொலைக்கான பரபரப்பு வாக்குமூலம் வெளியாகியுள்ளது.

இது தொடர்பான வாக்குமூலத்தில், என் முதல் மனைவி இறந்துவிட்ட பின்னர், கடந்த 1995 ஆம் வருடத்தில் மயிலானந்தத்தை திருமணம் செய்தேன். எங்கள் இருவருக்கும் காயத்ரி (வயது 25) என்ற மகள் இருக்கிறார். காயத்ரியை அங்குள்ள ஏ.வாழவந்தி பகுதியை சார்ந்த கவுதமன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தோம். அவர் கணவருடன் வாழவந்தி பகுதியில் வசித்து வருகிறார். 

நானும், எனது மனைவியும் வீட்டில் வசித்து வந்த நிலையில், எனக்கு கண் பார்வை பிரச்சனையால் பணிக்கு செல்ல இயலவில்லை. லாரி ஓட்ட சென்ற நேரத்தில் கிடைத்த வருமானத்தை மயிலாத்தாவிடம் கொடுத்து வைத்திருந்தேன். கண் ஆப்ரேசன் செய்வதற்கு பணத்தை கேட்டேன். ஆனால் மயிலாத்தா பணம் கொடுக்காமல் மழுப்பி வந்தார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவரை அடித்து உதைத்தேன். 

இதனால் என்னிடம் ஏதும் கூறாமல் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வீட்டை பூட்டிவிட்டு மயிலாத்தா வெளியேறவே, கடந்த 8 ஆம் தேதியன்று மீண்டும் வீட்டிற்கு வருகை தந்துள்ளார். ஐந்து நாட்களாய் எங்கே சென்றாய்? என்று கேள்வி கேட்கவே, எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து அவரை மீண்டும் அடித்தேன். இவர் ஐந்து நாட்களாக எங்கு இருக்கிறார்? என்பது தெரியாமல் தற்போது மீண்டும் வந்தது சந்தேகத்தை எழுப்பியது.

இதன் பின்னர் இவரை கண்காணித்து வந்ததில், இவர் அலைபேசியில் அடிக்கடி பேசி வந்தார். நான் கேட்டதற்கு உறவினரிடம் பேசுகிறேன் என்று கூறினார். சம்பவத்தன்று அலைபேசியை கேட்ட நேரத்தில், அலைபேசி மாயமாகிவிட்டது என்று தெரிவித்தார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தை அடுத்து அவரை உருட்டுக்கட்டை வைத்து இரவு முழுவதும் அடித்து உதைத்தேன். இதனால் அவர் மயக்கமடைந்தார். 

பின்னர் எனது மகளிற்கு தொடர்பு கொண்டு அம்மாவை அடித்துவிட்டேன், அவர் மயக்கமாக இருக்கிறார் என்று தெரிவித்தேன். உடனடியாக அவர் இல்லத்திற்கு வந்து அவசர ஊர்தியின் மூலம் நாமக்கல் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் நான் காவல் துறையினரிடம் சிக்கிக்கொண்டேன் என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து காவல் துறையினர் பரமானந்தனை சேலம் சிறையில் அடைத்தனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in namakkal husband killed wife due to doubts


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->