5 மாத கர்ப்பிணி காதலிக்கு கருக்கலைப்பு மாத்திரை.. நாடககாதலனால் உயிருக்கு போராடும் சிறுமி.. நாமக்கல்லில் பெரும் சோகம்.!! - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் அருகேயுள்ள நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்டுள்ள கிராமத்தை சார்ந்த சிறுமி பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். மனைவியுடைய பெற்றோர் வெளியூரில் இருந்து கட்டிட தொழிலாளர்களாக பணியாற்றி வந்துள்ளனர். 

இதனால் சிறுமி தனது பாட்டியின் இல்லத்தில் தங்கி பயின்று வந்த நிலையில்., மாணவி வசித்து வந்த கிராமத்தில் வசந்த் என்ற இளைஞன் வசித்து வந்துள்ளான். இவன் அங்குள்ள ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரியில் பயின்று வந்துள்ளான். 

மேலும்., மாணவி பள்ளிக்கு பேருந்தில் சென்று வந்த நிலையில்., இவருக்கு வசந்துடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது இவர்களுக்குள் காதலாக மாறவே., இருவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளனர். 

drama love,

மாணவியை நாடககாதலால் ஏமாற்றிய வசந்த் சமயத்துக்கு மேலாக தனது காம இச்சைக்கு மாணவியை இணங்கவைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இதனால் மாணவி கருவுற்ற நிலையில்., இது தொடர்பாக தனது காதலனிடம் தெரிவித்துள்ளார். 

மேலும்., திருமணம் செய்து கொள்ள கூறியும் மனைவி வற்புறுத்திய நிலையில்., கருவை கலைத்தால் மட்டுமே திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியுள்ளான். இந்த சமயத்தில் மாணவி 5 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். 

5 மாத கர்ப்பம் என்று தெரிந்தும் கருக்கலைப்பு மாத்திரையை மாணவிக்கு கொடுத்த நிலையில்., மாணவியும் இரண்டு நாட்கள் சாப்பிடாமல் இருந்த நிலையில்., காதலனின் வற்புறுத்தலின் பேரில் மாத்திரையை சாப்பிட்டுள்ளார். 

abortion,

இதன் காரணமாக சிறுமிக்கு கடுமையான உதிரப்போக்கு ஏற்பட்ட நிலையில்., இவரின் நிலையை கண்டு அதிர்ச்சியடைந்த பாட்டி சேலம் மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளார். 

சிறுமியின் உடல்நிலையானது கடுமையாக மோசமடைந்ததை அடுத்து., மருத்துவர்கள் சிறுமிக்கு கர்ப்பப்பை நீக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். மேலும்., சிறுமியின் உடல்நிலை தொடர்ந்து மோசமாகி வரும் நிலையில்., சிறுமியின் தாத்தா அளித்த புகாரின் பேரில் மேற்கொண்ட விசாரணையில் இத்தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து வசந்தை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in namakkal drama love girl pregnant admit in hospital due to late abortion


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->