சீரழியும் நாகர்கோவில்., அதிரடி நடவடிக்கையில் காவல் துறையினர்.!! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் இருக்கும் ஆனந்தன் பாலம் தம்மத்துக்கோணம் பகுதியில் தனியார் தங்கும் விடுதியானது செயல்பட்டு வருகிறது. இந்த தனியார் விடுதியில் இரவு மற்றும் பகல் நேரங்களில் விபசாரம் நடப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை அறிந்த காவல் துறையினர்., விடுதியை கண்காணிக்க முடிவு செய்தனர். 

இவர்களின் திட்டப்படி விடுதியை கண்காணித்து வந்த காவல் துறையினர்., விடுதிக்கு வாலிபர்கள் தொடர்ந்து வருவதை அறிந்துள்ளனர். இதனையடுத்து இவர்களை பின்தொடர்ந்து உடனடியாக விடுதிக்கு விரைந்த காவல் துறையினர்., அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். இந்த நேரத்தில்., காவல் துறையினர் வருவதை கண்ட வாலிபர் ஒருவர் தப்பியோடவே., அவரை விரட்டி மடக்கி பிடித்தனர். 

இந்த விடுதியில் உள்ள அறைகளை சோதனை செய்த சமயத்தில் இரண்டு பெண்கள் இருந்துள்ளனர். இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில்., ஒருவர் சென்னையை சார்ந்தவர் என்றும்., மற்றொருவர் பெங்களூரை சார்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர்களை பெண் விபச்சார புரோக்கர் ஒருவன் அழைத்து வந்து நாகர்கோவிலில் விபச்சாரம் நடத்தி வந்தது தெரியவந்தது. 

பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களை மகளீர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற காவல் துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும்., இவர்களை விபச்சாரத்திற்கு உபயோகம் செய்த புரோக்கரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

English Summary

in nagarkovil prostitution gang arrested by police


கருத்துக் கணிப்பு

புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து?
கருத்துக் கணிப்பு

புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து?
Seithipunal