தண்டவாளத்தில் வழக்கத்திற்கு மாறாக சப்தம்.. ஊழியர்களின் சோதனையில் பேரதிர்ச்சி..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கும் மயிலாடுதுறையில் இருந்து விழுப்புரத்திற்கு சென்று கொண்டு இருந்த இரயிலானது காலை சுமார் 6.10 மணியளவில் சீர்காழியை கடந்து சென்றுள்ளது. இந்த நேரத்தில், தண்டவாளத்தில் இருந்து அதிகளவு சப்தம் எழுந்துள்ளது. 

இதனால் அதிர்ச்சியடைந்த எஞ்சின் ஓட்டுநர் சீர்காழி இரயில் நிலையத்திற்கு இது தொடர்பான தகவலை தெரிவித்துள்ளார். இதனை அறிந்த அதிகாரிகள் உடனடியாக சீர்காழி இரயில் தடத்தில் சோதனை செய்துள்ளனர். 

இந்த சோதனையில் அங்குள்ள பாதரக்குடி பகுதியில் இரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் இரயில் நிலையங்களுக்கு விஷயத்தை தெரியப்படுத்தியுள்ளார். 

இதனையடுத்து இவ்வழியாக வரும் இரயில்கள் அனைத்தும் அடுத்தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில். ஒருமணிநேரத்திற்கு பின்னர் தண்டவாளத்தை ஊழியர்கள் சரி செய்துள்ளனர். மேலும், இந்த தகவலால் சீர்காழி இரயில் நிலையத்திற்கு 6.35 மணிக்கு வந்த திருச்செந்தூர் இரயிலும் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், இரயில் எஞ்சின் ஓட்டுநர் தக்க நேரத்தில் சப்தத்தை வைத்து அதிகாரிகளிடம்  தெரிவித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in nagapattinam train track damaged lucky peoples life saved


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->