கன்னியாகுமரி மினி பேருந்து விபத்து மறைவதற்குள்., நாகப்பட்டினத்தில் அரங்கேறிய சோகம்..!!  - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குளித்தலையில் பழைய பாலம் செல்லும் சாலையில் தேவி குமாரி மகளிர் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் பயின்று வரும் மாணவிகள் இச்சாலை வழியாக தினமும் கல்லூரிக்கு வந்து செல்வது வழக்கம். 

கடந்த 11-ம் தேதியன்று கல்லூரி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த நிலையில்., இந்த குறுகலான சாலையில் பள்ளி பேருந்து ஒன்று மாணவிகள் சென்ற திசைக்கு எதிர்திசையில் வந்துள்ளது. 

இந்த நேரத்தில்., இதற்கு எதிர் திசையில் வேகமாக மினி பேருந்து ஒன்று  வந்து., சாலையில் ஓரமாக சென்று கொண்டிருந்த மாணவிகள் மீது மோதியது. வாகனத்தை கட்டுப்படுத்த இயலாத ஓட்டுனர் என்ன செய்வதென்று தெரியாமல் அங்கிருந்த மினி பேருந்து மீது மோதி மாணவியின் மீது இடித்து நிறுத்தியுள்ளார். 

இந்த சம்பவம் கடந்த 11 ஆம் தேதியன்று நடைபெற்ற நிலையில்., தற்போது இதற்கான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதற வைத்துள்ளது. இந்த விபத்து குறித்த காட்சிகள் வெளியாகி பெரும் பதைபதைப்பை ஏற்படுத்திய நிலையில்., தற்போது நாகப்பட்டினத்தில் மற்றொரு விபத்து மினி பேருந்தால் நடந்துள்ளது.

accident, accident images,

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிக்கல்பத்து என்ற இடத்தில் உள்ள கிராமத்திற்கு சென்றுகொண்டு இருந்த மினி பேருந்தானது வயல்வெளிக்குள் பாய்ந்து விபத்திற்குள்ளானதில்., பேருந்தில் இருந்த மக்கள் படுகாயமடைந்து அலறித்துடித்துள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கிராமத்தினர் விரைந்து வந்து மக்களை மீட்டனர். 

மேலும்., இது தொடர்பாக காவல் துறையினருக்கும் - மீட்பு படையினருக்கும் தகவல் தெரிவித்த நிலையில்., தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் அனைவரையும் மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் 20 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in nagapattinam mini bus accident peoples injured


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->