போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்.! கொண்டாட்டத்தில் நிர்வாகிகள்.!! - Seithipunal
Seithipunal


உள்ளாட்சி தேர்தலில் குத்தாலம் ஒன்றியம் மருத்தூர் ஊராட்சியில் வேட்புமனு தாக்கல் செய்த 3 பேர் வாபஸ் பெற்றதால் மருத்தூர் ஊராட்சிமன்ற தலைவராக ஜானகிசின்னதுரை போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

நாகை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் மருத்தூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ஜானகிசின்னதுரை, பிரியா, ஜெயந்தி, விஜயலெட்சுமி ஆகிய நான்குபேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். 

இதில் திமுக சார்பில் போட்டியிட்ட ஜானகிசின்னதுரை தவிர மற்ற மூவரும் இன்று தங்களது வேட்புமனுக்களை திரும்ப பெற்றனர். இதைத்தொடர்ந்து ஜானகிசின்னதுரை போட்டியின்றி ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

ஜானகிசின்னதுரை இதற்கு முன் 2 முறை மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினராக பணியாற்றியுள்ளார். மருத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக இவரின் கணவர் சின்னதுரை ஒருமுறையும், இவரின் மகன் பிரசன்னா இருமுறையும் பணியாற்றியுள்ளனர். 

குத்தாலம் ஒன்றியத்தில் 51 ஊராட்சிகள் உள்ளன. மருத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மட்டும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் குடும்பத்தினர் 25 ஆண்டுகள் ஊராட்சி பொறுப்புகளில் பதவி வகுத்து வருவது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in nagapattinam janagi sinnathurai victory local body election


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->