கடலூரை தொடர்ந்து மயிலாடுதுறையில் பெரும் சோகம்.. வெள்ளத்தால் மூழ்கிய கிராமங்கள்.. பரிதவிக்கும் மக்கள்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் கடலூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் உள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே கனமழையானது பெய்து வருகிறது. மேலும்., நேற்று இரவு நேரம் முதலாகவே பலத்த மழையானது கொட்டிதீர்த்து வரும் நிலையில்., இம்மழை இரவு பகலாக நீடித்து வருகிறது. 

இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடும் நிலையில்., தாழ்வான பகுதிகள் அனைத்தும் தண்ணீர் தேங்கியதால் குளம் போல நின்றது. மேலும்., கடலூரை பொறுத்த வரையில், 12 செ.மீ மழை ஒரே நாளில் பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிப்படைந்த நிலையில்., பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையானது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் கிராமப்புறங்களை இணைக்கும் சாலைகள் என அடுத்தடுத்து முக்கிய சாலைகள் அனைத்தும் நீரினால் சூழப்பட்டு போக்குவரத்தானது துண்டிக்கப்பட்டது. பாதிக்கப்ட்ட இடங்களில் உள்ள மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

cudallore, cudallore rain, cudallore flood,

இதனைப்போன்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறையில் இருக்கும் பழவாறு ஆற்றின் வெள்ளப்பெருக்கு காரணமாக 30 க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை சூழ்ந்து, சுமார் 100 க்கும் மேற்பட்ட கிராமங்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளதால்., பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள மக்கள் அனைவரும் பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

கடல் ஒரு வாரகாலமாக பெய்து வரும் கனமழையின் காரணமாக வரகடை கிராமத்தில் உள்ள ஆற்றங்கரை தேடு மற்றும் வடக்குத்தெரு பகுதியில் பெரும் பாதிப்பானது ஏற்பட்டது. இதனால் அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டு தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில்., பாதிக்கப்பட்ட இடங்களில் இருக்கும் வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளது. 

மேலும்., மழையானது இதனைப்போன்று இன்னும் ஒரு சில தினங்கள் தொடர்ந்து நீடித்தால் ஆறுகளின் கரையோரத்தில் உடைப்பு ஏற்படலாம் என்ற அபாயமும் நிலவுவதால்., ஆற்றங்கரையோர மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இதுமட்டுமல்லாது சம்பா சாகுபடிக்காக பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் அனைத்தும் வெள்ள நீரினால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளதால் விவசாயிகள் பெரும் சோகத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இத்தொடர்மழையின் காரணமாக காவிரி ஆறு., பழவாறு., மஞ்சளாறு மற்றும் வீர சோழன் ஆறு போன்றவற்றிலும்., இதற்கான பாசன மற்றும் வடிகால் ஆறுகளிலும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழை நீர் அனைத்தும் வீட்டினை சூழ்ந்துகொண்டுள்ளதால் மக்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in nagapatinam rain flood peoples struggled


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->