மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் மின்தடையால் பலியான விவகாரத்தில்., மருத்துவமனை நிர்வாகத்தின் அதிரடி பதில்.!!  - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதிலும் கடந்த இரண்டு நாட்களாக திடீரென மழையானது பெய்து வருகிறது. மேலும்., பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதன் காரணமாக சாலைகளில் இருக்கும் மரங்கள் மின்சார கம்பிகளின் மீது சாய்ந்து விபத்திற்குள்ளாவதில் மின்சாரம் இன்றி மக்கள் தவித்து வந்தனர். 

இந்த நிலையில்., மதுரை மாவட்டத்தில் உள்ள மதுரை இராஜாஜி அரசு மருத்துவனையில் மின்சாரம் தடைப்பட்டதை அடுத்து., மருத்துவமனையில் இருந்த ஜெனரேட்டரானாது இயக்கப்பட்டது. இந்த நேரத்தில் சிறிது நேரம் இயங்கிய ஜெனரேட்டர் தீடீரென பழுதானது. 

இதன் காரணமாக மருத்துவமனை வளாகம் இருளில் மூலங்கியதை அடுத்து., தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து கொண்டு இருந்தனர். இந்த நேரத்தில் மின்சாரம் தடைப்பட்டதை அடுத்து மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தும்., 3 பேர் உயிர்க்கு போராடிய நிலையிலும் இருந்தனர்.

இந்த சமயத்தில் பலியான மதுரை மாவட்டத்தில் உள்ள பூஞ்சுத்தி பகுதியை சார்ந்த மல்லிகா (வயது 55)., விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருவில்லிபுத்தூரை சார்ந்த ரவிச்சந்திரன் (வயது 55) மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் பகுதியை சார்ந்த பழனியம்மாள் (வயது 60) ஆகியோர் பரிதாபமாக பலியானார்கள். 

இந்த தகவலை அறிந்த உறவினர்கள் மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபடவே., இந்த அதிர்ச்சி தகவலானது வெளியானது. இது தொடர்பான விசாரணை நடைபெற்று வந்த நிலையில்., இந்த பிரச்சனைக்கு மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக மருத்துவனையின் முதல்வர் வனிதா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது., மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உயிரிழந்த மூவரின் உடல் நிலையானது மோசமாக இருந்தது. 

சுமார் ஒரு மணி நேரம் மட்டுமே மின்தடையானது ஏற்பட்ட பட்சத்தில்., இந்த நேரத்திற்குள் இறந்த நபர்களை மின்தடையால் இறந்தவர்கள் என்று கூற இயலாது., மருத்துவமனையில் வெண்டிலேட்டர் மற்றும் தேவையான உபகரணங்கள் உள்ள காரணத்தால்., மின்தடை நேரத்தில் இன்னும் அதிகமான உயிர்களை காப்பாற்ற இயலும் என்று தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Madurai rajaji hospital patients died when power cut issue during surgery


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->