மக்களின் வெள்ளத்தில் ஆட்பறித்த கள்ளழகர்.! திக்குமுக்காடிய வைகையில் பக்தியுடன் பொதுமக்கள்.!! - Seithipunal
Seithipunal


மதுரையில் சித்திரைத் திருவிழா சைவமும், வைணவமும் இணைந்தத் திருவிழா ஆகும். இரு சமயங்கள் தொடர்புடைய மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவும் விளங்குகின்றன. சமயங்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கத்துடனே மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில் இரு விழாக்களும் இணைக்கப்பட்டு ஒரே விழாவாக ஆக்கினார். 

இதனால் வைகை ஆற்றின் வட கரையில் அமைந்த ஊரான தேனூரில் ஆற்றில் இறங்கும் விழா, வெகுகாலமாகவே நடைபெற்றுவருகிறது. பின்னாளில் இத்திருவிழா மதுரையில் வைகை ஆற்றில் இறங்கும்படியான விழாவாக மாற்றியமைக்கப்பட்டது.

இதற்காக, மதுரை மீனாட்சியின் அண்ணனான அழகர் தங்கையின் திருமணத்திற்கு வருவதாகவும், வருவதற்குள் திருமணம் முடிந்து விடவே ஆற்றிலிருந்து அப்படியே திரும்பி விடுவதாகப் புதிய கதையும் புனையப்பட்டது. உண்மையில் மண்டூக மகரிசிக்கும் நாரைக்கும் சாப விமோசனம் அளிக்க அழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார் என்பதே திருமலை நாயக்கர் காலத்துக்கு முன்பிருந்த பழைய புராணம்.

மதுரை கள்ளழகர் வரும் இன்று வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வானது நடைபெற்றது. இதற்கான பணிகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில்., திருவிழாவிற்கு மக்கள் வெள்ளம் ஆட்பறித்தது. சுமார் இலட்சக்கணக்கில் கூடியிருந்த நிலையில்., எதிர்சேவை புரிந்த கள்ளழகரை தங்க பல்லக்கில் வணங்கி வரவேற்று., கோலாகலத்துடன் வைகை ஆற்றில் இறங்கிய அழகை மக்கள் அனைவரும் கண்டு களித்தனர்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in madurai kallalagar in vaigai river peoples pray


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->