உன்னை நம்பித்தானே என்னையே அர்பணித்தேன்.!! நாடக காதலால் ஏமாற்றப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதறல்.!!  - Seithipunal
Seithipunal


இந்த உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான பல தொடர் அநீதிகள் நடைபெற்று வருகிறது. அவ்வாறு பல அநீதிகள் நடைபெற்று வரும் நிலையில்., நாடக காதல் என்னும் வலையில் விழும் பெண்கள் நாடகத்தை நம்பி தங்களின் வாழ்க்கையை இழந்து வருகின்றனர் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியையும்., சோகத்தையும் ஏற்படுத்துகிறது.

மதுரை மாவட்டத்தில் உள்ள பேரையூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட கிராமமான சிட்டிலொட்டிபட்டி பகுதியை சார்ந்த பெண்ணொருவர் காவல் நிலையத்திற்கு வருகை தந்து புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த புகாரில் அவர் தெரிவித்தாவது., 

மதுரை மாவட்டத்தில் உள்ள டி.கல்லுப்பட்டியில் இருக்கும் தனியார் ஸ்டுடியோவில் நான் பணியாற்றி வந்த நேரத்தில்., அதே பகுதியை சார்ந்த நாகராஜ் என்பவரின் மகனான அபிஷேக் (வயது 24) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. 

இந்த பழக்கமானது எங்களுக்குள் தொடர்ந்து வந்த நிலையில்., சென்னையில் இருக்கும் வழக்கறிஞர் ஒருவரிடம் உதவியாளராக பணியாற்றி வந்தேன். இந்த நேரத்தில் நான் சென்னையில் வீடெடுத்து வாடகைக்கு இருந்து வந்த நேரத்தில்., எங்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. 

இந்த சூழ்நிலையில்., சென்னைக்கு வருகை தந்த அபிஷேக் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி என்னை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தான். இந்த நிலையில்., நான் கர்ப்பமானதை அடுத்து., இதனை அபிஷேக்கிடம் தெரிவித்தேன். 

இதுமட்டுமல்லாது தன்னை திருமணம் செய்து கொள்ள கூறி கூறியதை அடுத்து., சில காலம் ஆகட்டும் என்று கூறி., எனது மனதை மாற்றி கருவை கலைக்க வைத்தான். பின்னர் திருமணத்திற்கும் மறுப்பு தெரிவித்தான். அவனிடம் அழுது புலம்பியும் எனக்கு எந்தவிதமான பதிலும் தரவில்லை. 

இதனையடுத்து அவனது இல்லத்திற்கு சென்று இது குறித்து முறையிட்டதில் எனக்கு மிரட்டல் வந்தது. இதன் காரணமாக எனது காதலன் மற்றும் அவனது பெற்றோரின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதனை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Madurai girl rapped by lover when using drama love and sexual harassment


கருத்துக் கணிப்பு

இந்தியா தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்ற போவது எப்படி?!
கருத்துக் கணிப்பு

இந்தியா தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்ற போவது எப்படி?!
Seithipunal