பட்டப்பகலில் தந்தை கண்முன்னேயே மகளை கடத்தி சென்ற கொடூரன்.! புயலாக விரைந்த தந்தை.. மதுரையில் பரபரப்பு சம்பவம்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கடந்த சில வருடங்களாகவே பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பிறந்த குழந்தைகள் முதல் வயதான மூதாட்டிகள் வரை அரங்கேறும் பாலியல் வன்கொடுமை., பாலியல் தொல்லை., நகைப்பறிப்பு., கொள்ளை., கொலை என்று தொடர்ந்து கொண்டே செல்கிறது.

இதுபோன்ற பல பிரச்சனைகள் பெண்பிள்ளைகளை வாட்டி வதைத்து வரும் நிலையில்., நாடக காதல் தொல்லையானது பெரும் பிரச்சனையாக இன்றளவில் அதிகமாக இருந்து வருகிறது. மதுரை மாவட்டத்தில் உள்ள வில்லாபுரம் பகுதியில் இருக்கும் கதிர்வேல் நகர் பகுதியை சார்ந்த 17 வயதுடைய சிறுமி தெப்பக்குளம் பகுதியில் இருக்கும் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வருகிறார். 

இவர் சம்பவத்தன்று தனது தந்தையுடன் இரு சக்கர வாகனத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற நிலையில்., இவர்கள் இருவரும் அங்குள்ள காமராஜர் சாலையருகே சென்ற சமயத்தில்., இவர்களை பின் தொடர்ந்து வந்த காரொன்று வேகமாக வந்து., மோட்டார் சைக்கிளின் மீது லேசாக மோதி விபத்திற்குள்ளாக்கி நின்றது. 

kidnapped, kidnapping,

இதனால் இருவரும் இரு சக்கர வாகனத்தில் இருந்து நிலைதடுமாறி விழுந்த நிலையில்., காருக்குள் இருந்து வந்த வாலிபன் ஒருவன்., மாணவியை காரில் கடத்தி கொண்டு சென்றுள்ளான். இதனையடுத்து பதறிப்போன தந்தை சுதாரித்து., தனது மகளை கடத்தி செல்லும் வாகனத்தை பின் தொடர்ந்து வேகமாக சென்று., அங்குள்ள தெப்பக்குளம் பகுதியில் காரை மறித்து தனது மகளை மீட்டுள்ளார். 

இதனையடுத்து இது குறித்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில்., சிறுமியை கடத்தி சென்றது அங்குள்ள சீனிவாச பெருமாள் கோவில் தெரு பகுதியை சார்ந்த பச்சமுத்து என்பவரது மகன் கமல் (வயது 27) என்பது தெரியவந்தது. இதனையடுத்து கமலை கைது செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

In madurai girl kidnapped by culprit rescued by father police investigation


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->