மதுரையில் தள்ளி வைக்கப்பட்ட திருமணங்கள்.. கொரோனா எதிரொலி..!! - Seithipunal
Seithipunal


சீன நாட்டினை மையமாக வைத்து பரவி வந்த கரோனா வைரஸ் 284,515 பேரை பாதித்துள்ளது. 11,838 பலியாகியுள்ளனர். மேலும், 93,566 பேர் கரோனாவில் இருந்து மீண்டெழுந்துள்ளனர். இந்தியாவிலும் இதன் தாக்கம் தற்போது வெளிப்பட துவங்கியுள்ளது. 

இந்தியாவில் தற்போது வரை 5 பேர் பலியாகியுள்ள நிலையில், 298 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா மேலும் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கையை மத்திய, மாநில அரசு எடுத்துள்ளது. 

இந்நிலையில், கரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த நாளை (21/03/2020) ஞாயிற்றுக்கிழமையன்று ஊரடங்கு கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி பேருந்துகள், இரயில் சேவைகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளது. 

மக்கள் காலை சுமார் 7 மணிமுதல், இரவு 9 மணிவரை வீட்டில் மக்கள் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மதுரையில் உள்ள சுற்றுவட்டார பகுதிகளில் முகூர்த்த நாளான நாளை 54 திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு இருந்துள்ளது. 

இந்த திருமணங்கள் அனைத்தும் மக்களின் நலன் கருதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறிய திருமண மண்டபம், கோவில்களில் நடைபெறவிருந்த திருமணமும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனைப்போன்று கால் டாக்சி மற்றும் ஆட்டோக்கள் இயங்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Madurai 54 marriage cancelled due to corona virus


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->