இரயில்வே ஊழியர்களை காவு வாங்கிய குமரி - மும்பை எக்ஸ்பிரஸ்.! பாலம் பணிக்கு சென்ற போது நேர்ந்த சோகம்.!! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குழித்துறை அருகேயுள்ள பகுதியில்., தாமிரபரணி ஆற்றின் மீது இரயில்வே பாலமானது உள்ளது. இந்த பாலத்திற்கு அருகிலேயே தற்போது புதிய பாலத்தின் பணிகள் நடைபெற்று வருகிறது. 

இந்த புதிய பலத்திற்கான பணியில் அங்குள்ள இரயில்வே பணியாளர்கள் ஈடுபட்டு வரும் நிலையில்., இன்று பகல் வேலையில் இராஜஸ்தான் மாநிலத்தை சார்ந்த ஜெய்சந்த் மீனா (வயது 32) என்ற பெண்ணும்., கேரளா மாநிலத்தில் உள்ள கொல்லம் பகுதியை சார்ந்த மதுசூதனன் என்ற இருவரும் பணியாற்றி வந்தனர். 

இவர்கள் இருவரும் அங்குள்ள பழைய இரயில்வே பாலத்தில் பணியாற்றிக்கொண்டு வந்த நிலையில்., மும்பை - கன்னியாகுமரி அதிவிரைவு இரயில் வேகமாக வந்துள்ளது. பாலத்தின் நடுப்பகுதியில் இருவரும் பணியாற்றி வந்த நிலையில்., இரயிலின் வருகையை கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். 

died, murder, killed, suicide attempt,

இதனையடுத்து இருவரும் இரயிலில் இருந்து தப்பியோட முயற்சித்த நிலையில்., இவரின் முயற்சிகள் பலிக்காது., இருவரும் இரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த நிலையில்., இருவரில் ஒருவரின் உடல் தண்டவாளத்திலும்., மற்றொருவரின் உடல் ஆற்றிலும் விழுந்துள்ளது. 

யாரும் எதிர்பாராத நேரத்தில்., நொடிப்பொழுதில் அரங்கேறிய விபத்தில்., சக ஊழியர்களும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். பின்னர் இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் இருவரின் உடலை கைப்பற்றினர்.  

இதுமட்டுமல்லாது இந்த விஷயம் குறித்து இரயில்வே மேல் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்துள்ள நிலையில்., இந்த விஷயம் குறித்து இரயில்வே காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் சக ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in kulithalai railway employee died train accident


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->