கள்ளக்காதலை அறிந்து கொண்ட மனைவி.! கொடூர எண்ணத்தை கட்டவிழ்த்துவிட்டதில் நேர்ந்த சோகம்.!! தாயை தேடி கண்ணீரில் குழந்தைகள்.!!  - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குருபரப்பள்ளியை அடுத்துள்ள தினப்பள்ளி கிராமத்தை சார்ந்தவர் ராஜேஷ். இவர் இராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் இராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவியின் பெயர் கவுதமி (வயது 29). இவர்கள் இருவருக்கும் கடந்த 2012 ம் வருடத்தில் திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில்., 5 வயதுடைய பெண் குழந்தையும்., 3 வயதுடைய ஆண் குழந்தையும் உள்ளனர். 

இந்நிலையில்., கடந்த வாரத்தில் கவுதமி அவரது இல்லத்தில் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொள்ள துவங்கினர். 

காவல் துறை அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் அவரது கணவரை தேடவே., அவர் விடுமுறைக்கு ஊருக்கு வந்ததை அறிந்தனர். இந்த சமயத்தில் அவர் தலைமறைவானதை தொடர்ந்து காவல் துறையினர் தேடி வந்தனர். அவரது அலைபேசி எண்ணின் மூலமாக சோதனை செய்ததில்., கர்நாடக மாநிலத்தில் உள்ள பகுதியில் தனது கள்ளக்காதலி இல்லத்தில் வசித்து வந்தது தெரியவந்தது. 

அங்கு விரைந்த காவல் துறையினர் அவருடைய கள்ளக்காதலி கலைவாணி (வயது 30) என்பவரையும்., ராஜேஷையும் கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதை அடுத்து., வாட்ஸப்பின் மூலமாக இவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு பின்னர் கள்ளக்காதலாக மாறியுள்ளது. மேலும்., கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். 

இந்த நிலையில்., ஊருக்கு வந்த ராஜேஷை சந்தித்த அவரது மனைவிக்கு கள்ளக்காதல் விபரம் தெரியவரவே., இதனால் ஏற்பட்ட தகராறில் மனைவியை கொலை செய்து கள்ளகாதலியின் இல்லத்திற்கு சென்று தலைமறைவந்து தெரியவந்தது. இதனையடுத்து இவர்கள் இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் சோகத்தையும்., பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

English Summary

in krishnagiri wife killed by her husband due to illegal affair


கருத்துக் கணிப்பு

கர்நாடக காவேரியில் தண்ணீர் திறப்பதன் காரணம்?
கருத்துக் கணிப்பு

கர்நாடக காவேரியில் தண்ணீர் திறப்பதன் காரணம்?
Seithipunal