புதிய கள்ளக்காதலனுடன் சேர்ந்து பழைய காதலனை கொலை செய்ய முயற்சித்த பெண்.. கிருஷ்ணகிரியில் பகீர்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிங்காரப்பேட்டை அருகேயுள்ள கோவிந்தபுரம் பகுதியை சார்ந்தவர் திருப்பதி (வயது 40). இவர் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். கேரளாவில் தங்கியிருந்து இவர் பணியாற்றி வரும் நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தை சார்ந்த மைதிலி (வயது 32) என்ற பெண்ணும் பணியாற்றி வந்துள்ளார். 

இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட பழக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறவே, இவர்கள் இருவரும் அவ்வப்போது தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். மேலும், இருவரும் மது அருந்திவிட்டு உல்லாசமாக இருந்த வருவதையும் வழக்கமாக வைத்துள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மைதிலியை தனது சொந்த ஊருக்கு திருப்பதி அழைத்து சென்றுள்ளார். 

illegal affair,

மேலும், தனது இல்லத்தில் மைதிலியை தங்க வைத்துவிட்டு மீண்டும் கேரளாவுக்கு சென்றுள்ள நிலையில், அவ்வப்போது திருப்பதிக்கு தொடர்பு கொண்ட மைதிலி மது வாங்கி தர கூறி முறையிட்டுள்ளார். இவர் தொடர்ந்து மது பழக்கத்திற்கு ஆளான காரணத்தால், குடியை மறப்பதற்கு பல்வேறு மருத்துவமனைக்கு அழைத்து சென்று திருப்பதி சிகிச்சையளித்து வந்துள்ளார்.  

பின்னர் மீண்டும் கேரளாவுக்கு பணிக்கு சென்றுவிடும் நிலையில், மைதிலிக்கு அப்பகுதியை சார்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து புதிதாக வந்த கள்ளக்காதலனுடன் மதுஅருந்திவிட்டு உல்லாசமாக இருந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் திருப்பதி இல்லத்திற்கு வருகை தந்துள்ளார். 

hospital,

இந்த நேரத்தில், மைதிலி மற்றொரு நபருடன் மது அருந்துவதை கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி ஆத்திரமடைந்து தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் மைதிலி மது பாட்டிலை உடைத்து திருப்பதியின் கழுத்தில் குத்தியுள்ளார். இதனால் ஏற்பட்ட இரத்த வெள்ளத்தில் திருப்பதி மயக்கமடையவே, அப்பகுதியை மக்கள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் திருப்பதியை அனுமதி செய்த்தனர். 

பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பதி தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட நிலையில், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் மைதிலியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தலைமறைவாக இருக்கும் வாலிபரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Krishnagiri illegal affair girl murder attempt her first affair man


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->