கரூர் மாவட்ட விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி...! காரணம் தெரியுமா?..!! - Seithipunal
Seithipunal


கரூர் மாவட்டம் சுற்றுப்புற பகுதியில் பல்வேறு கணக்கான விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மரவள்ளிக்கிழங்கை பயிரிட்டுள்ளனர். 

இந்தப் பகுதியில் விளையும் மரவள்ளி கிழங்குகளை நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம்., புதன்சந்தை., மின்னாம்பள்ளி., செல்லப்பம்பட்டி., நாமகிரிப்பேட்டை., கீரனூர்., ஆத்தூர்., ஜேடர்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் ஜவ்வரிசி தயார் செய்யும் மில்களுக்கு புரோக்கர் மூலம் தன் கணக்கில் வாங்கி அனுப்பி வைக்கின்றனர். 

maravalli, maravalli kilangu, மரவள்ளி, மரவள்ளி கிழங்கு,

மரவள்ளி கிழங்குகளை பாயின்ட் அடிப்படையில் வாங்குகின்றனர். கிழங்குகளில் எவ்வுளவு டார்ச் சத்து இருக்கின்றதோ? அது பொறுத்துதான் விலை நிர்ணயம் செய்யப்படும். அதுபோலதான் ஜவ்வரிசி விலை உயரும்போது மரவள்ளி விலையும் உயரும். 

வீழ்ச்சி அடையும் போது விலை குறையும்., கடந்த வாரம் ஜவ்வரிசி தயாரிக்க மில் அதிபர்கள் மரவள்ளிக்கிழங்கு ஒரு டன்னுக்கு 9000 கொடுத்து வாங்கிச் சென்றனர். இந்த வாரம் ஒரு டன் மரவள்ளி கிழங்கு ரூ.10 ஆயிரத்து 500 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in karur former are happy


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->