செந்தில் பாலாஜியின் இல்லத்தில் அதிரடி காட்டிய வருமான வரி சோதனை.. முடக்கப்பட்ட முக்கிய ஆவணங்கள்..!! - Seithipunal
Seithipunal


முன்னாள் அதிமுக அமைச்சரும், தற்போதைய திமுகவின் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்பாலாஜியின் வீட்டிற்கு போலீசார் சீல் வைத்தனர். இன்று காலை கரூர் டிஎஸ்பி தலைமையில் 15 பேர் கொண்ட போலீசார் ராமேஸ்வரபட்டியில் உள்ள செந்தில் பாலாஜியின் வீடு, அவரது சகோதரர் வீடு, சென்னையில் உள்ள வீடு உள்ளிட்ட இடங்களில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.  

2011-2015 ஆம் ஆண்டில் போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பதவி வகித்த போது போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித்தருவதாக 16 பேரிடம் சுமார் 95 லட்சம் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. 

இதையடுத்து, அம்பத்தூர் கணேஷ்குமார் என்பவர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். அந்த  புகாரின் அடிப்படையில் தான் இன்று சோதனை நடைபெற்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த சோதனையை அடுத்து செந்தில்பாலாஜியின் வீட்டிற்கு போலீசார் சீல் வைத்தனர். 

இன்று நடத்தப்பட்ட சோதனையில் தங்க நகைகள், வாகனங்கள் மற்றும் கார் போன்றவற்றின் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சொத்து தொடர்பான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், வங்கி கணக்குகள், வங்கி கணக்கு புத்தகங்கள் மற்றும் வங்கி கணக்குகளின் லாக்கர் சாவி, பென் டிரைவ், மடிக்கணினி மற்றும் மெமரி கார்டு போன்றவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in karur dmk party senthil balaji income tax rid


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->