கட்சி கூட்டத்திற்கு வந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற கவுன்சிலர்.. குமரியில் பரபரப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக அரசியல் கட்சியுடைய நிகழ்ச்சியானது நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்ட நிலையில், கட்சி தொண்டர்கள் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர். 

இந்த நிகழ்ச்சி நிறைவு பெற்றது கட்சி நிர்வாகிகள் பேசிக்கொண்டு இருந்த நிலையில், பெண் பிரமுகர் ஒருவரிடம் அப்பகுதி கவுன்சிலர் பேசிக்கொண்டு இருந்துள்ளார். மேலும், குடும்பத்துடைய வருமானம், குடும்பத்தின் நிலைமை குறித்து அக்கறையுடன் கேட்ட நிலையில், பெண் பிரமுகர் தனது வறுமை குறித்து கூறவே, தான் நடத்தி வரும் குழுவில் கடன் வாங்கி தருவதாக கூறியுள்ளார். 

loan,

மேலும், இந்த லோனை பெற அங்குள்ள திருவட்டார் பகுதியில் நடந்து வரும் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்றும், கையெழுத்திட வேண்டும் என்றும் கூறவே, கடன் கிடைக்கும் ஆவலில் பெண்ணும் கவுன்சிலருடன் ஆட்டோவில் திருவட்டார் சென்று கொண்டு இருந்துள்ளனர். இந்த நேரத்தில் ஆட்டோ அங்குள்ள திற்பரப்பு சாலையில் பயணம் செய்ய துவங்கியுள்ளது.

sexual abuse, sexual torture,

இதனால் சந்தேகமடைந்த பெண்மணி கவுன்சிலரிடம் கேள்வி எழுப்பவே, கூட்டம் திற்பரப்பு பகுதியில் நடைபெறுவதாக கூறியுள்ளார். இவர்கள் இருவரும் திற்பரப்பு சென்றதும் பெண்ணொருவர் முன்னதாகவே நின்றுகொண்டு இருந்ததால், பெண் பிரமுகர் அச்சமில்லாமல் சென்ற நிலையில், அங்குள்ள விடுதிக்கு அழைத்து சென்று தனது அறைக்கு வருமாறு கூறியுள்ளார். 

இதனையடுத்து காமுகனின் எண்ணத்தை அறிந்து சுதாரித்துக்கொண்ட பெண்மணி, தன்னை உல்லாசம் அனுபவிக்க அழைத்து வந்துள்ளான் என்பதை அறிந்து அங்கிருந்து தப்பி தக்கலைக்கு வந்து தனது கணவரிடம் நடந்ததை கூறி அழுதுள்ளார். இதனை கேட்ட கணவர் அங்குள்ள காவல் நிலையத்தில் பிகுர் அளிக்கவே, கவுன்சிலரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in kanniyakumari girl rap attempt by counselor


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->