கன்னியாகுமரியில்., நிறைமாத கர்ப்பிணிக்கு., குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சையில் அரங்கேறிய அலட்சியம்.!! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் களியக்காவிளை அருகேயுள்ள கானவிளைப் பகுதியை சார்ந்தவர் விஜய். இவர் இராணுவ வீரனாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியின் பெயர் ஆஷா (வயது 29). 

இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்த நிலையில்., தனது பிரசவத்திற்க்காக ஆஷா ஆசாரிபள்ளம் பகுதியில் இருக்கும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஒன்பது நாட்களுக்கு முன்னதாக பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டார். 

மருத்துவமனையில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்ததை அடுத்து., அவருக்கு சுகப்பிரசவத்தில் ஆணுக்குழந்தை பிறந்தது. இதனையடுத்து தாயும் சேயும் நலமாக இருந்தனர். 

இந்நிலையில்., ஆஷாவிற்கு குடும்பக்கட்டுப்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டு., அறுவை சிகிச்சைக்கு தயாராக இருந்தனர். அதன் படி அறுவை சிகிச்சை மேற்கொண்ட சமயத்தில் மருத்துவரால் இல்லாமல்., செவிலியர்கள் மயக்க மருந்தை வழங்கியுள்ளனர். 

இதனால் ஆஷா சுயநினைவை இழந்த நிலையில் மூன்று நாட்களாக கோமாவில் இருந்ததை அறியாத உறவினர்கள்., மருத்துவர்களிடம் மன்றாடியும் அவரை காண அனுமதியளிக்காமல்., உண்மையையும் கூறாமல் இருந்து வந்தனர். 

மறுநாள் காலையில் ஆஷா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என்று தெரிவித்துள்ளனர்., இதனை அறிந்த ஆஷாவின் உறவினர்கள் வடநியாயக அதிர்ச்சியடைந்து கதறியழுத்தனர். மேலும்., அவரது உடலை வாங்க மறுத்து மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

English Summary

in kanniyakumari a pregnant woman killed doctors wrong treatment


கருத்துக் கணிப்பு

இன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்!
கருத்துக் கணிப்பு

இன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்!
Seithipunal