பெட்ரோல் குண்டு., அரிவாள் வீச்சு.. அரங்கேறிய படுகொலை..! விசாரணையில் பகீர் பின்னணி.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் திருவள்ளூர் அருகேயுள்ள பகுதியில் வெடிகுண்டு வீசியும்., அரிவாளால் வெட்டியும் பயங்கர படுகொலை அரங்கேறியது. இது குறித்த விசாரணையில் காஞ்சிபுரம் பகுதியை சார்ந்தவர்கள் என்பதும்., காஞ்சிபுரம் ரவுடி ஸ்ரீதரின் இடத்தை பிடிக்க நடக்கும் மோதலில் இக்கொலை அரங்கேறியுள்ளது தெரியவந்துள்ளது. 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரபல ரவுடியாக இருந்து வந்த ஸ்ரீதர்., கடந்த 2017 ஆம் வருடத்தில் கம்போடியா நாட்டில் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து., காஞ்சிபுரத்துடைய டான் யார் என்பது தொடர்பாக ஸ்ரீதரின் ஆதரவாளர்களுக்குள் பிரச்சனை மற்றும் போட்டி ஏற்பட்டுள்ளது. 

இந்த விஷயம் தொடர்பாக ஸ்ரீதரின் கார் ஓட்டுநர் தினேஷ் மற்றும் ஸ்ரீதரின் மைத்துனர் தணிகா ஆகியோருக்கு இடையே பகை இருந்து கொண்டு இருக்கும் நிலையில்., இருதரப்பு சார்பாக அடுத்தது கொலை அரங்கேறி வரும் நிலையில்., இக்கொலையும் பொதுமக்களை பெரும் பீதிக்கு உள்ளாக்கியுள்ளது. 

crime, crime images,

இதனைத்தொடர்ந்து தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் தினேஷ் மற்றும் அவனது கூட்டாளி தியாகு என்பவரை குண்டர் சட்டத்தில் கைது செய்த நிலையில்., தணிகா தலைமறைவாக இருந்து காவல் துறையினரால் தேடப்பட்டாலும் கொலைகள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. 

மேலும்., கடந்த சனிக்கிழமையின் போது திருவள்ளூரில் இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களை 6 பேர் கொண்ட கும்பலானது குண்டுவீசி அரிவாளால் வெட்டி படுகொலை செய்திருந்தது. இந்த விசாரணையின் முதற்கட்ட தகவலில் கொலையான நபர்கள் தணிகாவின் கூட்டாளி ஜீவா மற்றும் கோபி என்பது தெரியவந்தது. 

இதனையடுத்து பழிக்கு பழி கொலை சம்பவம் அரங்கேறியுள்ளதாக காவல் துறையினர் சந்தேகித்துள்ள நிலையில்., இது தொடர்பான சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க வேண்டும் என்று மக்கள் காவல் துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in kanchipuram sridhar gang members murder


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->