குறைந்த முன்பணத்தில் கடன் வாங்கி தருவதாக நூதன மோசடி.. கண்ணீரில் 440 அப்பாவி பொதுமக்கள்..!! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நீலமங்கலம் கூட்டுரோடு பகுதியில் மைக்ரோபைனான்ஸ் என்கிற பெயருடைய தனியார் நிதி நிறுவனமானது செயல்பட்டு வந்துள்ளது. இந்த நிறுவனத்தில் ரூ.5 ஆயிரம் கட்டும் பட்சத்தில், ரூ.1 இலட்சம் கடன் தருவதாக கூறி பொதுமக்களிடம் விளம்பரப்படுத்தி வந்துள்ளனர்.

இந்த விசயத்தை அறிந்த 440 க்கும் மேற்பட்ட நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தியுள்ளனர். இதன் மூலமாக ரூ.22 இலட்சம் வசூலாகியதை அடுத்து, நிதி நிறுவனத்தில் கூறியது போல கடன் பெற்று தராமல் நிறுவனத்தார் கம்பி நீட்டியுள்ளனர். 

இந்த விஷயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர்களில் தண்டல் பகுதியை சார்ந்த 30 க்கும் மேற்பட்ட நபர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் நிதி நிறுவன உரிமையாளர்களை தேடி வந்துள்ளனர்.

இந்த நேரத்தில், இந்நிறுவனத்தின் உரிமையாளர் திருவாரூர் மாவட்டத்தில் இருக்கும் வலங்கைமான் பகுதியில் இருந்த ரகுபதி என்பவரனின் மகன் வேதகிரி (வயது 36) மற்றும் தஞ்சாவூர் மாவட்டதத்தில் உள்ள வடக்குவாசல் நாடார் தெரு பகுதியை சேர்ந்தவரான மணி என்பவரின் மகன் சுரேஷ் (வயது 36) ஆகியோரை கைது செய்தனர்.

இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையை அடுத்து, இதுபோல தமிழகத்தில் பல பெயர்களை வைத்து நூதன மோசடி செய்து வந்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து இவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in kallakurichi fraud gang arrest police


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->