அதிகரிக்கும் காட்டுபன்றிகள் அட்டூழியம்.. கண்ணீரில் விவசாயிகள்.!! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் இருக்கும் வனவிலங்குகள் அவ்வப்போது மலையடிவார பகுதியில் உலா வருவது வழக்கமான விஷயமாகும். 

இந்த நிலையில்., களக்காடு பகுதியில் உள்ள தலையணை மலையடிவார பகுதியை சார்ந்த இடங்களில் காட்டுப்பன்றியின் அட்டூழியமானது அதிகரித்து உள்ளதும்., இரவு வேளைகளில் வனப்பகுதியில் இருந்து விவசாய நிலத்திற்குள் புகுந்து பயிர்களை சேதப்படுவதுமாக உள்ளது. 

மேலும்., இப்பகுதியை சார்ந்த ஓய்வு பெற்ற வேளாண்மைத்துறை அதிகாரியின் விளைநிலத்தில் நேற்று நுழைந்த காட்டுப்பன்றி சுமார் 100 க்கும் மேற்பட்ட வாழைகளை நாசம் செய்துள்ளது. 

இந்த வாழைகள் அனைத்தும் ஏத்தன் இரகத்தினை சார்ந்த வாழைப்பழம் குலைத்தள்ளும் நிலையில் இருந்த நிலையில்., காட்டுப்பன்றிகள் அட்டூழியத்தால் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தகவலறிந்த வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சோதனை மேற்கொண்டனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in kalakkadu forest pigs torture high former feeling sad


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->