அடுத்தடுத்து குறையும் நீர் வரத்து..! ஏமாற்றத்தில் சுற்றுலா பயணிகள்.. சோகத்தில் தொழிலாளர்கள்.!! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வெளியேற்றம் செய்யப்படும் நீரின் அளவானது படிப்படியாக குறைக்கப்பட்டு உள்ளது. 

தமிழகத்தின் தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னதாக 50 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டு இருந்த நிலையில்., திடீரென 33 ஆயிரம் கனஅடி நீராக குறைந்தது. 

hogenakkal, ஒகேனக்கல்,

இந்த நிலையில்., இன்று 33 ஆயிரம் கனஅடி நீர் வரும் என்று எதிர்பார்த்த நிலையில்., 31 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக அங்குள்ள மெயின் அருவி மற்றும் ஐந்தருவி., சினிபால்ஸ் போன்ற அருவில் தண்ணீர் ஆட்பறித்துள்ளது. 

மேலும்., தற்போது 82 ஆவது நாளாக அருவியில் குளிக்கவும் - 13 ஆவது நாளாக பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ள நிலையில்., பரிசல் இயக்குபவர்கள் கவலையடைந்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in hogenakkal water comes low quantity


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->