காவல் அதிகாரி.. விசாரணை என்று பெண்ணை கடத்த முயன்ற கடத்தல் கும்பல்.. கிண்டி இரயில் நிலையத்தில் பட்டப்பகலில் பேரதிர்ச்சி.!! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள கிண்டி வெங்கடேஸ்வரா நகர் பகுதியை சார்ந்தவர் வெங்கடேஷ். இவரது மனைவியின் பெயர் சுபாஷினி (வயது 42). இவர் இரயில்வே ஊழியராக பணியாற்றி வரும் நிலையில்., மாம்பலம் இரயில்வே நிலையத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறார். 

இவர் தினமும் கிண்டி இரயில் நிலையத்தில் இருந்து மாம்பலம் இரயில் நிலையத்திற்கு செல்லும் நிலையில்., இன்று வழக்கம் போல கிண்டியில் காத்துகொண்டு இருந்துள்ளார். இந்த நேரத்தில்., அங்கு வந்த பெண்ணொருவர் தன்னை பெண் காவல் அதிகாரி என்று அறிமுகம் செய்துள்ளார். 

Mambalam, Mambalam railway station,

மேலும்., இவருடன் வந்த இரண்டு ஆண் நபர்கள் காவல் அதிகாரிகள் என்று கூறி., பெண் காவல் அதிகாரி என்று கூறியவர் முகத்தை துணியால் மறைத்துள்ளார். சுபாஷினியின் மீது புகார் உள்ளதாகவும்., பெரம்பூர் காவல் துறையினர் விசாரணை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். 

இதுமட்டுமல்லாது காவல் ஆய்வாளர் முத்துலட்சுமி மற்றும் பிற அதிகாரிகள் காரில் உள்ளதாகவும்., தங்களுடன் வருமாறும் கூறியுள்ளார். காவல் அதிகாரி என்று கூறிய பெண் சுபாஷினியின் கையை பிடித்து இழுக்கவே., பதற்றமடைந்த சுபாஷினி வர மறுப்பு தெரிவித்து அலறியுள்ளார். 

இவரின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த இரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரையவே., காவல்துறையினர் வருவதற்குள் பெண் தப்பி ஓடியுள்ளார். இவருடன் வந்த போலி காவல் அதிகாரிகள் இரண்டு பேர் மாட்டிக்கொண்டனர். 

kidnapped,

அதிரடியாக இரயில்வே நிலையத்தில் வைத்தே மேற்கொண்ட விசாரணையில்., காரில் இருக்கும் கும்பலை மடக்கி பிடித்தனர். இதனைத்தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்., காவல் அதிகாரி என்று கூறிய பெண்ணின் பெயர் வதனி என்பது தெரியவந்துள்ளது. 

இதனைப்போலவே உடன் வந்த வியாசர்பாடியை சார்ந்த ஜீவானந்தம் மற்றும் பாலகுரு என்பதும் தெரியவந்ததை அடுத்து., இவர்களுடன் காரில் முத்துலட்சுமி., வதனி மற்றும் தமிழ்செல்வி ஆகியோர் இருந்துள்ளனர். இவர்கள் அனைவரும் சேர்ந்து சுபாஷினியை கடத்தி பணம் பறிக்க முயற்சித்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து இவர்கள் ஐவரையும் கைது செய்து தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

In guindy railway station girl try to kidnap police arrest kidnapping gang


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->