சேலம் டு பவானி சாலையில் இடைமறித்து வழிப்பறி., கூட்டுப்பாலியல் வன்கொடுமை., ஆபாச புகைப்படங்கள் பதிவு.!! வெளியான பேரதிர்ச்சி தகவல்.!! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானியை சார்ந்தவர் வடிவுக்கரசி (வயது 26) பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் பெங்களூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது உறவினர் மகேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சேலம் மாவட்டத்தில் உள்ள அஸ்தம்பட்டியில் வசித்து வருகிறார். கடந்த 22 ம் தேதியன்று சேலத்திற்கு வருகை தந்த இளவரசியை., சந்தித்து மூர்த்தி பேசிவிட்டு பின்னர் இரவு சேலத்தில் இருந்து பவானிக்கு புறப்பட்டுள்ளார். 

இருவருக்கும் கோவை பிரதான சாலையில் உள்ள  கொண்டலாம்பட்டி மேம்பாலத்திற்கு அருகே சென்று கொண்டு இருக்கும் நேரத்தில் இவர்களை இடைமறித்த கும்பல் ஒன்று பயங்கர ஆயுதங்களை காட்டி மிரட்டி., இளவரசியிடம் இருந்த நான்கரை சவரன் நகைகளை பறித்து விட்டு சம்பவ இடத்தை விட்டு தப்பி சென்றது. இதையடுத்து இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இதனை ஏற்ற காவல் துறையினர் உடனடியாக வழக்குப்பதிவு செய்து கொண்டலாம்பட்டி அருகேயுள்ள புத்தூரை சார்ந்த மணிகண்டன் (வயது 21)., சுபாஷ் (வயது 27)., இளங்கோ (வயது 28) மற்றும் தினேஷ் (வயது 27) ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு சுமார் 40 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர். இந்த நிலையில்., அவர்களிடம் மேற்கொண்ட தீவிர விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவர துவங்கியது. 

இது போன்று பல பெண்களிடம் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டதும்., பலமுறை பெண்களை வலுக்கட்டாயப்படுத்தி கூட்டு பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதும் அரங்கேறியுள்ளது. அதுமட்டுமல்லாது பாலியல் வன்முறையில் ஈடுபடும் போது ஆபாசமாக படம் எடுத்து பின்னர் அந்த பெண்ணை தொடர் வன்முறைக்கு உபயோகப்படுத்தியதும் தெரியவந்துள்ளது. 

இது குறித்த தொடர் விசாரணையில் மணிகண்டன் மற்றும் சுபாஷ் முக்கிய குற்றவாளிகளாக செயல்பட்டு வந்துள்ளார். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னதாக ஒரு பெண் மற்றும் ஆண் சாலையோரத்தில் உள்ள இருட்டு பகுதியில் ஒதுங்கியதை கண்டு அவரை பின் தொடர்ந்து., வாலிபரை அடித்து விரட்டி விட்டு கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும்., அந்த பெண் பாலியல் தொழிலில் ஈடுபடும் நபர் என்பது பின்னர் இவர்களுக்கு தெரியவந்துள்ளது. 

இந்த நிலையில்., இப்போது பாதிக்கப்பட்டுள்ள பெண் தனது உறவினருடன் வந்து கொண்டு இருக்கும் வேளையில் வழிமறித்த மணிகண்டன் அவர்கள் இருவரையும் கட்டியணைத்து முத்தம் கொடுக்க சொல்லி., அதனை தனது அலைபேசியில் புகைப்படம் போன்று பதிவு செய்துள்ளான். மேலும்., இது குறித்து புகார் தெரிவிக்கும் பட்சத்தில் இந்த புகைப்படங்களை இணையத்தில் பரவவிடுவதாக மிரட்டியுள்ளான். 

இதனை கண்டுகொள்ளாமல் பெண் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்ததை அடுத்து., இவர்கள் மேல் இருந்த பல பழைய குற்றச்சாட்டுகளின் மூலமாக இவர்கள் அனைவரையும் காவல் துறையினர் உடனடியாக கைது செய்துள்ளனர். இதுமட்டுமல்லாது பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களையும் ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோக்கள் பதிவு செய்து அவர்களையும் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளனர். 

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் வெங்கடேஷ் என்பவன் தலைமறைவான நிலையில்., இது போன்று சுமார் 100 க்கும் மேற்பட்ட பெண்களை பலவந்தப்படுத்தி பலாத்காரம் செய்து., ஆபாச படம் எடுத்ததாக தகவல் வெளியாகும் நிலையில்., இது குறித்து காவல் துறை அதிகாரிகள் இவர்கள் பெண்களை மிரட்டி செயின் பறிப்பு சம்பவங்களில் எடுத்து வந்ததாகவும்., ஒரேயொரு பெண்ணிடம் அத்துமீறியதாக மட்டுமே புகார் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in erode to selam road side sexual harassment and theft gang arrested by police


கருத்துக் கணிப்பு

பெண் மருத்துவர் கொலை வழக்கில் போலீசார் நடத்திய என்கவுண்டர்!
கருத்துக் கணிப்பு

பெண் மருத்துவர் கொலை வழக்கில் போலீசார் நடத்திய என்கவுண்டர்!
Seithipunal