நெடுஞ்சாலை பாணியில் தமிழகத்தில் சத்தமின்றி நடந்த கொள்ளை..! வெளியான பேரதிர்ச்சி தகவல்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் ஈரோட்டில் இருந்து திண்டுக்கல் வழியாக தென்மாவட்டத்திற்கு ஜவுளி மற்றும் மஞ்சள் போன்ற பொருட்களை ஏற்றிவரும் லாரியினை குறிவைத்து கொள்ளையடிக்கும் சமவன்கள் கடந்த சில நாட்களாக அரங்கேறி வருவதால் லாரி உரிமையாளர்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர். மேலும்., சினிமா பாணியில் இக்கொள்ளை அரங்கேறுவதால் லாரி ஓட்டுநர்களும் பெரும் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர். 

கடந்த சில வருடத்திற்கு முன்னதாக வெளியான நெடுஞ்சாலை என்ற திரைபடத்தில் லாரியில் உள்ள பொருட்கள் கொள்ளை குறித்தும்., இதற்கு பின்னணியில் இருக்கும் கும்பல் குறித்தும் காட்டப்பட்ட நிலையில்., கடந்த சில மாதங்களாக இது போன்ற குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது. 

கடந்த 20 ஆம் தேதியன்று ஈரோட்டில் இருந்து ஜவுளி பண்டல்களை ஏற்றுக்கொண்ட லாரியொன்று., தார்பாய்கள் உதவியுடன் மூடப்பட்டு புறப்பட்டு சென்றது. மேலும்., லாரி கொள்ளை குறித்து லாரியின் உரிமையாளர் சுதாகரன் ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கை விடுத்து., லாரியினை இடையில் நிறுத்தவேண்டாம் என்று கூறியுள்ளார். 

இதனையடுத்து முதலாளியின் அறிவுரைப்படி லாரியை ஓட்டுநர் எங்கும் நிறுத்தாது வந்து., மதுரையில் உள்ள திருநகர் சுங்கச்சாவடிக்கு அருகே தேநீர் அருந்துவதற்காக நிறுத்தியுள்ளார். இந்நேரத்தில் லாரியின் பின்புறத்தில் சென்று சோதனை செய்த போது., தார்பாய் கிழிக்கப்பட்டு ஜவுளிகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. 

toll plaza,

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் தனது முதலாளிக்கு தகவல் தெரிவிக்கவே., இதனை கேட்டு அதிர்ச்சியடைந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சுதர்சன் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை காவல் துறையினர் ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தாமாக முன்வந்து லாரி கடந்து சென்ற சுங்க சாவடியில் உள்ள கண்காணிப்பு காமிராவை சோதனை செய்த நேரத்தில்., அதிகாலை அரவக்குறிச்சி சுங்கச்சாவடியை கடக்கும் முன்னதாக லாரியின் தார் பாய் மூடப்பட்டு இருந்தது தெரியவந்துள்ளது. 

இதற்கு பின்னர் அங்கிருந்து 16 கிமீ தொலைவில் உள்ள வேடசந்தூர் அரிசி ஆலையில் பொருத்தப்பட்ட தார்பாயினை சோதனை செய்த போது தார்பாய் கிழிக்கப்பட்டு இருந்தது தெரியவந்துள்ளது. பின்னர் இது தொடர்பாக வேடசந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நேரத்தில்., எல்லையினை மேற்கோள்கட்டி அலைக்கழித்துள்ளனர். 

பின்னர் தாடிக்கொம்பு காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தும் இதே நிலைதான் என்று வந்ததால் தனது சங்கத்தில் புகார் அளித்துள்ளார். இதற்குப்பின் தான் அதிர்ச்சி தரும் தகவலாக அடுத்தடுத்து 40 லாரிகளில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தெரியவந்துள்ளது. மேலும்., கடந்த ஒரு வருடமாக இதனைப்போன்ற சம்பவம் நடைபெற்று வந்ததாகவும்., காவல் துறையினரும் துப்பு கிடைக்காமல் தவித்து வருவதால் புகாரை ஏற்க மறுப்பதாகவும் தெரியவந்துள்ளது. 

மேலும்., தனது கட்டுப்பாட்டில் இருக்கும் சாலையில் செல்லும் வாகனத்தின் பாதுகாப்பினை பொருட்படுத்தாத சுங்க சாவடி நிறுவனம் பண வேட்டையில் மட்டும் குறியாக இருந்து வருகிறது என்றும்., நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு படையினரும் இதனை பிரச்சனை என்று கூற கருதவில்லை என்று ஆதங்கம் தெரிவிக்கப்படுகிறது. மேலும்., இதனைப்போன்று 50 க்கும் மேற்பட்ட கொள்ளைகள் அரங்கேறியுள்ளதும் தெரியவந்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in erode to dindigul road lorry robbery gang drivers panic


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->