வெல்லத்தில் கெமிக்கல்.. விற்பனை மையத்தில் பேரதிர்ச்சி.. அதிர்ச்சியில் அதிகாரிகள்.!! - Seithipunal
Seithipunal


நாம் தினமும் சாப்பிடும் உணவு பொருட்கள் மற்றும் உணவு பொருள்களில் உள்ள காய்கறிகளை அவ்வப்போது உணவு பாதுகாப்பு படையினர் சோதனை செய்வது வழக்கமான ஒன்றாகும். இவ்வாறாக சோதனை செய்யும் நேரத்தில் உணவு பொருட்களில் கெமிக்கல்கள் பயன்படுத்தப்பட்டதை அவ்வப்போது கண்டறிந்து மக்களுக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர்.

தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சித்தோடு பகுதியில் விவசாயிகளுக்கான வெல்லம் மற்றும் வெல்ல தூள் விற்பனை மையமானது பெரிய அளவில் செயல்பட்டு வருகிறது. 

இந்த சந்தையில் விற்பனையாகும் வெல்லத்தின் நிறமானது மெருகேற்றப்பட்டு காண்பிக்க., வெல்ல உற்பத்தியாளர்களின் சிலர் மைதாவிலான சர்க்கரை மற்றும் சூப்பர் பாஸ்ட் கெமிக்கல்கள் போன்றவை பயன்படுத்தப்பட்டு வருவதாக புகார்கள் தொடர்ந்து எழுந்துள்ளது. 

இந்த விஷயத்தை அறிந்த மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடியாக வெல்ல சந்தையில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது தரமற்று இருந்த 2900 கிலோ வெல்லத்தினை சோதனைக்கு எடுத்து சென்றுள்ளனர். 

நான்கு மாதிரிகளை எடுத்து சென்று மேற்கொண்ட சோதனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உணவு பாதுகாப்பு துறை அலுவலகர் கலைவாணி தற்போது வரை 5 முறை ஆய்வு மேற்கொண்டுள்ளதாகவும்., தரமற்ற வெல்லம் விற்பனைக்கு கொண்டு வந்த 12 பேரின் மீது நீதிமன்ற வழக்கு தொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in erode Food Safety officers discovers chemicals using sugarcane product


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->