போலி முகநூல் கணக்கில் புள்ளிங்கோ தில்லாலங்கடி காதல்... ஈரோட்டில் இருந்து சென்னை வந்து தத்தளித்த முரட்டு சிங்கிள்..!! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் பகுதியை சார்ந்தவர் சண்முக சுந்தரம். இவர் தனது முகநூல் காதலியை சந்திக்க சென்று, திருட்டு புள்ளிங்கோவிடம் சிக்கி சின்னாபின்னமான தகவல் தற்போது வெளிவந்துள்ளது. 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியை சார்ந்தவர் சண்முக சுந்தரம் (வயது 36). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பதால், முரட்டு சிங்கள் என்றும் அப்பகுதியில் அழைக்கப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக பெண்ணின் முகநூல் கணக்கிற்கு தகவல் அனுப்பியுள்ளார். 

குறித்த பெண்ணின் முகநூல் கணக்கில் இருந்து பதில் வந்ததும், உடல்கள் புல்லரித்து உனக்கும் வாழ்க்கை அமையப்போகிறது என்ற ஆவலில், தினமும் முகநூலில் கொஞ்சல்கள் தொடர்ந்து வந்த நிலையில், பெண்ணின் புகைப்படத்தை கண்டு இன்ப அதிர்ச்சிக்கு சண்முக சுந்தரம் உள்ளாகியுள்ளார். 

பின்னர் பெண்ணின் அலைபேசி எண்ணை குட்டிக்கரணம் அடித்து பெற்ற நிலையில், பெண்ணின் குயில் போன்ற குரலால் சூடான சாம்பாரில் இட்ட கட்டியான நெய் போல உருகி ஓடியுள்ளார்.  

இதனையடுத்து தனது காதலியை பார்க்க ஆவல் கொண்ட சண்முக சுந்தரத்திற்கு, தான் வீட்டில் தனியாக இருக்கிறேன் என்றும், தனிமையில் சந்திக்கலாம் என்றும் காதலி அழைப்பு விடவே, முரட்டு சிங்கிளை என்று மிங்கில் ஆகிவிடலாம் என்று நினைத்து, 3 பட தனுஷ் போல முகத்தில் இல்லாத தாடியை வறட்டென ஷேவிங் செய்து புது மாப்பிள்ளையாகவே புறப்பட்டு சென்னைக்கு வந்துள்ளார். 

காதலிக்கு தொடர்பு கொண்ட போது கோயம்பேட்டில் இருந்து மாதவரம் வரச்சொல்லவே, அங்கிருக்கும் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியாக வரசொல்லிய நிலையில், சுமார் 5 சென்னை புள்ளிங்கோக்கள் சண்முகத்தை மடக்கி கத்தி முனையில் ரூ.5 ஆயிரம் மற்றும் தங்க சங்கிலி, மோதிரம், அலைபேசி ஆகியவற்றை பறித்து, ஏ.டி.எம் அட்டையின் இரகசிய எண்ணையும் பெற்று பணம் எடுக்க சென்றுள்ளனர். 

சுமார் 3 புள்ளிங்கோ பணத்தை எடுக்க மோட்டார் சைக்கிளில் பார்க்கவே, இரண்டு புள்ளிங்கோ காவல் காத்துகொண்டு இருக்க, சண்முகத்தின் நல்லநேரம் காவல் துறையும் எதிர்பாராத விதமாக வந்துள்ளது. இதனையடுத்து இரண்டு புள்ளிங்கோக்கள் தலையில் தட்டி காவல் நிலையத்திற்கு தூக்கி செல்ல முயற்சித்த போது, இதனை கவனித்த 3 புள்ளிங்கோ பைக்கில் பதறி ஓடியுள்ளது. 

இரண்டு புள்ளிங்கோவிடம் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், போலி முகநூல் கணக்குகள் மூலமாக பெண்கள் போல சித்தரித்து பேசி, எதிர்முனையில் பேசும் நபரின் ஆசையை தூண்டி கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. மேலும், யுவராஜ், சதீஷ், ஆதி மற்றும் நவீன்குமார் ஆகியோர் சேர்ந்து 17 வயதுடைய சிறுவனை பெண் போல பேச வைத்துள்ளது தெரியவந்துள்ளது. 

இந்த விஷயத்தில் நவீன்குமார் மற்றும் 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், காவல் துறையினர் வசம் தப்பி சென்ற யுவராஜ், ஆதி, சதீஷ் ஆகியோரில், யுவராஜ் மற்றும் சதீஷ் இ.சி.ஆர் சாலை விபத்தில் பலியானதும், தலைமறைவாக இருக்கும் ஆதியை காவல் துறையினர் தேடி வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in erode Facebook fake account pollingo cheated and robbery


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->