நாமக்கல் - ஈரோடு மாவட்ட எல்லை மூடல்.. மாவட்ட நிர்வாகம் அதிரடி.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கொரோனாவின் பரவலானது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சற்றுமுன் நிலவரப்படி 396 பேருக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவிற்கு பலியானவர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. 

மக்கள் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பயணப்படுவதை தடுப்பதற்காக, தற்போது இருக்கும் இடத்திலேயே தனிமைப் படுத்துவதற்காக மத்திய அரசு போக்குவரத்தினை முடக்குவதாக அறிவித்தது. மேலும், கொரோனவை கட்டுப்படுத்துவதற்காக மார்ச் 31ம் தேதி வரை நாடு முழுவதும் அனைத்து பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

அதேபோல மெட்ரோ ரயில்களும் மார்ச் 31ம் தேதி வரை நாடு முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளது. மிக முக்கியமாக நாடு முழுவதும் மாநிலங்களுக்கிடையேயான போக்குவரத்தினை தடை செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. அதேபோல கொரோனா பாதிக்கப்பட்டுள்ள 75 மாவட்டங்களில் முழுவதுமாக முடக்குவது எனவும் தெரிவிக்கப்பட்டது. 

தமிழக அரசின் சார்பாகவும், தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அனைத்தும் இன்று நள்ளிரவு முதல் மார்ச் 31 நள்ளிரவு வரை இயங்காது என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேபோல சென்னையில் இயங்கி வரும் மெட்ரோ ரயில் மார்ச் 31ம் தேதி வரை இயங்காது என எனவும் அறிவித்தது.. சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களை முழுவதுமாக முடக்கி வைப்பதற்கு தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்த நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் இருந்து ஈரோடு செல்லும் பள்ளிபாளையம் எல்லை மூடப்பட்டுள்ளது. இரு மாவட்டத்திற்கு இடையேயான வாகன போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கான வாகனங்கள் மட்டுமே இயக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. மேலும், அத்தியாவசிய தேவைக்காக இயங்கும் வாகனங்கள் சோதனை மற்றும் கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படும்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Erode and Namakkal border closed


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->