இருக்கைக்கு கீழே ஓட்டை.. சிக்கிய குழந்தையின் கால்கள்.. பேருந்து முன் அமர்ந்து போராடி வெற்றிபெற்ற தாய்..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நந்தவனப்பட்டி பகுதியை சார்ந்தவர் உஷா. இவர் நேற்று மதிய நேரத்தில் தனது 3 வயது மகன் பாண்டியனுடன், வத்தலகுண்டு செல்வதற்கு திண்டுக்கல்லில் இருந்து தேனி செல்லும் அரசு பேருந்தில் எறியுள்ளார். இவர்கள் இருவரும் ஓட்டுனரின் பின்புற இருக்கையில் அமர்ந்த நிலையில், திண்டுக்கல் அருகே இவர்களின் பேருந்து சென்று கொண்டு இருந்துள்ளது. 

இந்த நிலையில், பேருந்து சென்று கொண்டு இருக்கும் போதே பாண்டி திடீரென அலறியுள்ளான். இதனையடுத்து உஷா சுதாரித்து பார்க்கையில் பாண்டியின் கால்கள் சீட்டின் அடியில் சிக்கியிருந்தது தெரியவந்துள்ளது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த உஷா, ஓட்டையில் மகன் விழுந்துவிடாமல் இருப்பதற்காக கால்களை பிடித்துக்கொண்டு பாதுகாத்துள்ளார். 

பின்னர் தனது மகனின் கால்களை மெதுவாக வெளியே எடுத்த நிலையில், இது தொடர்பாக ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் தெரிவித்துள்ளார். இதன்பின்னர் இருவரும் அமருவதற்கு மற்றொரு இருக்கையை வழங்கியுள்ளார். இதனையடுத்து உஷா திண்டுக்கல் போக்குவரத்து கிளை மேலாளரை தொடர்பு கொண்டு விஷயத்தை தெரிவித்து புகார் எழுப்பியுள்ளார். 

மேலும், இந்த விசயத்திற்கு கிளை மேலாளர் மற்றும் அதிகாரிகள் சரிவர பதில் தெரிவிக்காத நிலையில், பேருந்து வத்தலகுண்டு வந்ததும் பேருந்தில் இருந்து இறங்க மறுத்து போராட்டம் செய்துள்ளார். பேருந்தை பணிமனைக்கு கொண்டு செல்ல கூறி வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் விழிபிதுங்கிய ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மாற்று பேருந்தில் பயணிகளை அனுப்பி வைத்துவிட்டு பணிமனைக்கு பேருந்தில் உஷாவும் பயணம் செய்துள்ளார். 

பணிமனையில் உஷாவை சமாதானம் செய்யும் நோக்கிலேயே மேலாளர் இருந்த நிலையில், இவரது சமாதானத்தை ஏற்க மறுத்த உஷா பேருந்தை சரி செய்யும் நோக்கில் முனைப்புடன் இருந்துள்ளார். இதன்பின்னர் சுமார் 4 மணிக்கு உஷாவின் முன்னிலையில் பேருந்தின் ஓட்டை அடைக்கப்பட்டு, பிற குறைகளும் சரி செய்யப்பட்டுள்ளது. இதன் பின்னர் அங்கிருந்து உஷா புறப்பட்ட நிலையில், இந்த விஷயத்தை அறிந்த இணையதள நபர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in DIndigul child leg struggled in bus seat later problem solved


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->