அரசு பேருந்து தலைகுப்புற கவிழ்ந்து பெரும் விபத்து..! வத்தலக்குண்டில் பெரும் சோகம்.. பரிதாபமாக பலியான உயிர்கள்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் சேலம் மாவட்டத்திலுள்ள ஆத்தூரை அடுத்த உள்ள பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (வயது 50). இவர் கோவை அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.  

இவர் நேற்று இரவு நேரத்தில் திருப்பூரில் இருந்து தேனிக்கு அரசுப் பேருந்தை இயக்கி உள்ளார். பேருந்தில் மொத்தம் 40 பயணிகள் இருந்த நிலையில்., பேருந்தானது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு செங்கட்டம்பட்டி அருகே சாலை பகுதியில் சென்று கொண்டிருந்துள்ளது. 

இந்த சமயத்தில் அப்பகுதியில் லேசான சாரல் மழை பெய்த நிலையில்., பேருந்தின் ஓட்டுநர் அங்கிருந்த பாலத்தை கவனிக்காமல் அதன் அருகே சென்று திடீரென பிரேக்கை அழுத்தினார். இதனால் பேருந்து நிலைதடுமாறிய நிலையில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. 

accident, accident images,

இந்த விபத்தில் பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிய நிலையில்., இதனை கண்ட அப்பகுதி வழியாக வந்து கொண்டிருந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பேருந்துக்குள் இருந்தவர்களை மீட்க போராடினர். 

இதற்குப் பின்னர் இதுகுறித்து காவல்துறையினருக்கும் தீயணைப்பு மீட்பு படையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர்., பேருந்தில் உயிருக்குப் போராடியவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

இந்த நிலையில்., மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பேருந்து ஓட்டுனர் ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும்., தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பீகார் மாநிலத்தைச் சார்ந்த ருக்குமா (வயது 40) என்ற பெண்மணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in dindigul bus accident peoples died


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->