சோறு கூட நிம்மதியாக சாப்பிட முடியவில்லை.. கண்ணீர் விடும் 5 கிராம மக்கள்.. படையெடுக்கும் ஈக்கள்.!! - Seithipunal
Seithipunal


தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரூரை அடுத்துள்ள கருங்கல்பாடி கிராமத்தில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் எஸ்.கே.எம். கோழிப்பண்ணை அமைந்துள்ளது. இந்த கோழிப்பண்ணையை சுற்றிலும் ஆலம்பாடி, இளங்குன்னி மற்றும் மொண்டுக்குழி போன்ற 5 கிராமங்கள் உள்ளது. 

இந்த 5 கிராமங்களிலும் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் நிலையில், எஸ்.கே.எம் கோழிப்பண்ணையில் இருக்கும் கழிவுகளை முறையாக அகற்றுவதில் என்றும், இதனால் கழிவுகளில் இருந்து ஈக்கள் உருவாகி கிராமத்தை நோக்கி படையெடுத்து வருவதாகவும் மக்கள் கூறுகின்றனர். 

மேலும், அப்பகுதி முழுவதுமே ஈக்களால் சூழப்பட்டு இருக்கும் நிலையில், உண்ணும் உணவு மற்றும் குடிக்கும் தண்ணீர் என்று அனைத்திலும் ஈக்கள் அதிகளவு விழுந்து விடுகிறது. இதனால் பல உடல்நல கோளாறுக்கும் பொதுமக்கள் உள்ளாகி அவதியுற்று வருகின்றனர். 

இதுமட்டுமல்லாது இறந்துபோன கோழிகளை அங்குள்ள காலி நிலத்தில் போட்டு எரிதப்பதால் ஏற்படும் துர்நாற்ற பிரச்சனையால் சுவாசம் தொடர்பான பிரச்சனை ஏற்படுவதாகவும் கண்ணீருடன் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். 

மேலும், இது தொடர்பாக ஆலை நிர்வாகத்தாரிடம் கேட்டால் ஈக்களின் வருகையை தடுக்க பசை தடவிய டேப்களை ஒட்டியுள்ளதாகவும், மருந்துகள் தெளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். இது எதுமே பலனளிக்காது மக்கள் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளனர். 

இது தொடர்பாக நோய்வாய்ப்பட்டு மருத்துவமனைக்கு சென்று வரும் நிலையில், மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும் பயனில்லை. இனியாவது அரசு தரப்பில் தேவையான நவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in darmapuri housefly spoil village peoples health


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->