கல்லூரி விடுதியில் தூக்கில் தொங்கிய மாணவி வழக்கில்.... 3 பக்க கடிதத்தில் பகீர் தகவல்...! நெஞ்சை உருக்கும் சோகம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரூரை அடுத்துள்ள பாப்பிரெட்டிப்பட்டி ஜம்மனஅள்ளி கோபாலபுரம் பகுதியை சார்ந்தவர் திருமலை. இவரது மூத்த மகளின் பெயர் நிவேதா (வயது 23). இவர் சேலம் மாவட்டத்தில் உள்ள சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சி தாவரவியல் இரண்டாம் வருடம் பயின்று வருகிறார். 

இவர் பல்கலைக்கழகத்தில் இருக்கும் விடுதியில் தங்கியிருந்து பயின்று வந்த நிலையில், அங்குள்ள 75 ஆவது அறையில் இருக்கும் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை அறிந்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இவரது அறையில் இருந்த நோட்டு மற்றும் புத்தகங்களை கைப்பற்றியதில் காதல் குறியீடுகள், கவிதைகள் போன்றவை எழுதிவைக்கப்ட்டு இருந்துள்ளது. மாணவி கைப்பட எழுதிய 3 பக்க கடிதமொன்றும் சிக்கியுள்ளது.  

இது தொடர்பான கடிதத்தில், காதலரின் பெயரை குறிப்பிட்டு கவிதைகள் எழுதியும், மாமா தன்னை திருமணம் செய்துகொள்ளுங்கள் என்றும், உன்னை பார்த்த நாள் முதலாகவே கணவனாக ஏற்றுக்கொண்டு வாழ்ந்து வருகிறேன், இந்த ஜென்மத்தில் உன்னைத்தான் திருமணம் செய்துகொள்வேன், நீயில்லாத வாழ்க்கை வேண்டாம்.. 

நீ என்னை ஏற்க மறுப்பு தெரிவிக்கிறாய்... என்னை திருமணம் செய்து கொள் மாமா... என்று எழுதியுள்ளார். இந்த நிலையில், நிவேதா காதலித்த வாலிபருக்கு மற்றொரு பெண்ணுடன் திருமணம் நிச்சயம் முடிந்ததாக தெரியவருகிறது. காதலருடன் சேர்ந்து வாழ இயலாது என்று எண்ணி நிவேதா தற்கொலை முடிவு எடுத்திருக்கலாம் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.  

மேலும், மாணவி பயன்படுத்தி வந்த அலைபேசி கைப்பற்றப்பட்ட நிலையில், மாணவி தற்கொலைக்கு முன்னதாக அலைபேசி அணைத்து வைக்கப்பட்டுள்ளது.. சம்பவத்தன்று மாணவி யாரிடம் பேசினார்? என்பது தொடர்பாக சைபர் கிரைம் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். மாணவி யாரை காதலித்து வந்தார்? என்பது தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், பிரேத பரிசோதனைக்கு பின்னர் மாணவியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.  

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in darmapuri college girl suicide attempt


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->