ஓசி பிரியாணிக்கு பஞ்சாயத்தை கிளப்பி சண்டை... விருத்தாசலத்தில் திமுக வேட்டி அடாவடி.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாசலம் பிரியாணி கடையில் சாப்பிட்டுவிட்டு, திமுக கட்சியை சார்ந்த பிரமுகர் பணம் தர மறுப்பு தெரிவித்து சண்டையிடும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவியுள்ளது.

மேலும், கடந்த ஒரு வருடத்திற்கு முன்னதாக சென்னையில் இருக்கும் விடுதியில் ஓசி பிரியாணி கேட்டு திமுக கட்சியின் மாணவரணி நிர்வாகி பாக்ஸர், உணவகத்தின் உரிமையாளர் மற்றும் ஊழியர்களை தாக்கிய வீடியோ காட்சிகள் வெளியானது. 

இதனைப்போன்றே பல சம்பவங்கள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது இதே சம்பவம் விருத்தாசலத்தில் நடைபெற்றுள்ளது. விருத்தாசலம் பெரியார் நகர் பகுதியில் உள்ள பிரபல உணவகத்திற்கு வருகை தந்த திமுக பிரமுகர் பிரியாணி சாப்பிட்டுள்ளார். 

இதன்பின்னர் உணவாக ஊழியர்களுடன் வாக்குவாதத்தை ஏற்படுத்தி பணம் கொடுக்க மறுப்பு தெரிவித்து அவதூறாக அங்கிருக்கும் நபர்களை பேசியுள்ளார். மேலும், நீ வீடியோ எடுத்துக்கொள் என்று அனைவரும் அடிக்க முயற்சித்துள்ளார். இது தொடர்பான தகராறில் ஈடுபட்ட நபரின் விபரம் தெரியவராத நிலையில், வீடியோ காட்சிகள் மட்டும் இணையத்தில் பரவி வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Cudallore virudhachalam dmk supporter fight due to Briyani


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->