காவல் ஆய்வாளர், உதவி காவல் ஆய்வாளரை தரக்குறைவாக பேசிய விவகாரம்.. அதிரடி நடவடிக்கை எடுத்த டி.ஐ.ஜி.!! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் பெண் காவல் ஆய்வாளர் இடையே ஏற்பட்ட மோதல் குறித்து வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த நடுவீரப்பட்டு பகுதியில் வசித்து வருபவர் பிரபு இவர் திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சசிகலா பண்ருட்டி பகுதியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சொத்து தகராறு சம்பந்தமாக உதவி ஆய்வாளர் பிரபுவின் அம்மா உள்ளிட்ட 4 பேர் மீது புகார் கொடுத்துள்ளார். 

அப்போது அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவல் ஆய்வாளர் வனஜாவிடம், செய்யார் காவல் நிலையத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளர் பிரபு தன் மனைவியை அளித்த புகாரின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளார். 

இதனால் பிரபுவின் மனைவியிடம் உன் கணவர் உதவி ஆய்வாளர் என்றால் பெரிய கொம்பா? என மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வனஜா பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பிரபுவிடம் அவரது மனைவியை கூறவே, பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையம் வந்த பிரபு  இது தொடர்பாக ஆய்வாளர் வனஜாவிடம் கேட்டுள்ளார். 

அப்போது அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.  உதவி ஆய்வாளர் பிரபுவை தகாத வார்த்தையால் திட்டி உள்ளார். மேலும், உன்னை ரிமாண்ட் செய்து விடுவேன் என ஆய்வாளர் வனஜா மிரட்டியுள்ளார். காவல் அதிகாரிகள் இருவரும் வாக்குவாதம் செய்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக வந்தது.

இந்த வீடியோ காட்சிகள் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதனை கவனித்த விழுப்புரம் சரக டி.ஐ.ஜி சந்தோஷ் குமார் காவல் ஆய்வாளர் வனஜாவை விழுப்புரம் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in cudallore Inspector and SI conversation


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->