பெண்ணின் புகைப்படத்தை மாபிங் செய்து பதிவு செய்த தலித் இளைஞன்.! மனமுடைந்து தற்கொலை செய்த இளம்பெண்.! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி பகுதியை சார்ந்த பெண் ராதிகா. இவர் கடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.சி.ஏ இரண்டாம் வருடம் பயின்று வருகிறார். ராதிகாவின் அத்தை மகனின் பெயர் விக்னேஷ். இவர்கள் இருவரும் இன்னும் சில வருடத்தில் திருமணம் முடிப்பதற்கு முடிவுகள் எடுக்கப்பட்டு., ராதிகா படிப்பை முடித்தவுடன் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. 

குறவன்குப்பத்திற்கு அருகில் உள்ள காலனி பகுதியை சார்ந்த தலித் இளைஞன் பிரேம்குமார். இவன் ராதிகாவின் புகைப்படங்களை ஆபாசமாக மாபிங் செய்து., இணையத்தில் பதிவு செய்துள்ளான். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெண் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். இவர் தற்கொலை செய்ததற்கு பின்னர் கதறியழுத குடும்பத்தினர் செய்வதறியாது திகைத்துள்ளனர். 

இந்த நேரத்தில்., இணையத்தில் மாபிங் செய்யப்பட்டு பரவிய ஆபாச புகைப்படத்தின் காரணமாக மகள் தற்கொலை செய்து கொண்டால் என்ற செய்தியானது தெரியவரவே., இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் பிரேம்குமாரின் இல்லத்திற்கு சென்று வீட்டை அடித்து நொறுக்கினர். இந்த தகவலானது காவல் துறையினருக்கு தெரியவரவே., உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். 

இந்த சமயத்தில்., ராதிகா இறந்த செய்தியை அறிந்து மனமுடைந்த விக்னேஷ் தற்கொலை முடிவு செய்து., தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால்., அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை., அவரை அடித்து கொலை செய்திருக்க வேண்டும் என்றும் தகவல் வெளியாகிறது. இந்த சம்பவத்தால் இருதரப்பிற்கும் இடையே பெரும் பிரச்சனை ஏற்பட்டுள்ளதால்., பாதுகாப்பிற்காக காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 

இது குறித்து ராதிகாவின் தந்தை மற்றும் விக்னேஷின் தந்தை ஆகியோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில்., இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சமயத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் ராதிகா மற்றும் விக்னேஷின் மரணத்திற்கு நியாயம் கேட்டு போராட்டம் நடத்தவே., எதிர்தரப்பில் இருந்து கல்வீச்சு சம்பவமும் அரங்கேறியுள்ளது. 

இதனால் அங்கு தொடர் பதற்றம் நிலவி வரும் சூழ்நிலையில்., காவல் துறையினரின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது. இருவரின் உடலும் தற்போது கடலூரில் உள்ள மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில்., பிரேம் குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் தலைமறைவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.. 


இந்த பிரச்சனைக்கு தற்போது வரை முக்கிய அரசியல் கட்சிகள் கண்டனம் கூட தெரிவிக்காத நிலையில்., தலித் இளைஞர் அல்லது பெண் எதோ ஒரு காரணத்தால் இறந்தால்., பெரும்பான்மை ஊடகங்கள் மற்றும் அரசியல் கட்சிகள்., நடுநிலை வாதிகள் என அனைவரும் குரல் கொடுத்து நியாயம் என்ற பெயரில் அரசியல் செய்யும் நிலையில்., இந்த பிரச்சனைக்கு தற்போது வரை பாட்டாளி மக்கள் கட்சியை தவிர பிற கட்சிகள் கண்டனம் கூட தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 



இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in cudallore girl and her lover attempt suicide due to release mafing photo in social media


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->