வெள்ளத்தில் தத்தளிக்கும் கடலூர் மாவட்டம்.. மிதக்கும் வீடுகள்.. பதறவைக்கும் வீடியோ காட்சிகள்..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் கடலூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் உள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே கனமழையானது பெய்து வருகிறது. மேலும்., நேற்று இரவு நேரம் முதலாகவே பலத்த மழையானது கொட்டிதீர்த்து வரும் நிலையில்., இம்மழை இரவு பகலாக நீடித்து வருகிறது. 

இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடும் நிலையில்., தாழ்வான பகுதிகள் அனைத்தும் தண்ணீர் தேங்கியதால் குளம் போல நின்றது. மேலும்., கடலூரை பொறுத்த வரையில், 12 செ.மீ மழை ஒரே நாளில் பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

cudallore, cudallore rain, cudallore flood,

இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிப்படைந்த நிலையில்., பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையானது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடலூரில் உள்ள வன்னியர்பாளையம்., வில்வநகர்., கூட்டுறவு நகர்., விஜயலட்சுமி நகர்., புதுப்பாளையம் மற்றும் வில்வராயநத்தம் போன்ற 80 க்கும் மேற்பட்ட நகர்ப்பகுதிகளில் இருக்கும் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளை சுற்றி மழை நீர் தேங்கி, வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

வீடுகளில் புகுந்த வெள்ள நீரை அகற்ற மக்கள் தண்ணீர் பம்புகள் மூலமாகவும்., வாளியினை கொண்டும் வெளியேற்றினர். குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீரானது சூழ்ந்து தீவு போல காட்சியளித்தது. மேலும்., கடலூரில் உள்ள நெய்வேலி என்.எல்.சி பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கானது ஏற்பட்டது. இதன் காரணமாக கடலூர் - விருத்தாசலம் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது.

பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்கள் மற்றும் அங்குள்ள தனியார் பள்ளிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் நிலையில்., அங்குள்ள 300 க்கும் மேற்பட்ட ஏரிகள் நிறைந்துள்ளது. இதுமட்டுமல்லாது 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெற்பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்ங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in cudallore district heavy rain flood peoples struggled


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->