கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கில்.. குற்றவாளிக்கு கருணை.. கொந்தளிக்கும் பெற்றோர்கள்.!!  - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டத்தை சார்ந்த தனியார் பள்ளியில் பயின்று வந்த சிறுமி முஸ்கான். இவரது சகோதரரின் பெயர் ரித்திக். இவர்கள் இருவரும் கடந்த 2010 அம்மன் வருடத்தின் போது., வாடகை கார் ஓட்டுநர் மோகன்ராஜ் என்பவனால் கடத்தப்பட்டு., கொலை செய்யப்பட்டனர். இவர்களின் உடலை அங்குள்ள பொள்ளாச்சி பகுதியருகே கண்டெடுத்தனர். 

இவர்களின் உடலை பிரேத பரிசோதனை செய்யப்பட்ட சமயத்தில்., சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த வழக்கு விசாரணை தொடர்பாக மோகன்ராஜ் மற்றும் அவனது நண்பன் மனோகரன் என்பவனும் கைது செய்யப்பட்டனர். 

coimbatore sexual harassment and murder case, கோவை பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கு,

மேலும்., அக்கா - தம்பி இருவரும் அவர்களுக்கு தெரிந்த கார் ஓட்டுநர் மூலமாகவே கடத்தப்பட்டு., சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு., கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சமயத்தில்., விசாரணைக்கு அழைத்து செல்லும் போது., மோகன்ராஜ் தப்பியோட முயற்சிதை அடுத்து காவல் துறையினரால் சுட்டு கொலை செய்யப்பட்டார். 

இந்த வழக்கு தொடர்பான விசாரணை கோயம்புத்தூரில் உள்ள நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்., இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி மனோகரனிற்கு தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டார். இந்த தீர்ப்பை எதிர்த்து மனோகரன் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த நிலையில்., இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம்., மனோகரனின் மனுவை தள்ளுபடி செய்து ஏற்கனவே உத்தரவிட்டது. 

coimbatore sexual harassment and murder case, கோவை பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கு,

தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மறுஆய்வு செய்ய கூறி மனோகரன் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தான். உச்சநீதிமன்றமும் தூக்கு தண்டனையை உறுதி செய்த நிலையில்., டிசம்பர் 2 ஆம் தேதியை தூக்கிலிடும் தேதியாக கோவை நீதிமன்றம் அறிவித்திருந்தது. இந்த தீர்ப்பை தற்போது சென்னை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்து அறிவித்துள்ளது.

மேலும்., மனோகரன் தரப்பில் ஆளுநருக்கு கருணை மனு அனுப்புவதற்கு அவகாசம் வழங்காமல் தூக்கு தண்டனையை நிறைவேற்ற உத்தரவு பிறப்பித்துள்ளதாக மனுதாக்கல் செய்யப்பட்ட நிலையில்., இதனை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம் தூக்கு தண்டனையை நிறுத்தி வைத்து., சுமார் 4 வாரத்திற்குள் தமிழக அரசு பதிலளிக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது பெற்றோர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Coimbatore sexual harassment case court judgement


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->