காதலனுடன் சண்டை.. காதலனின் கண்முன்னே உயிர்நீத்த காதலி... கோயம்புத்தூரில் பேரதிர்ச்சி.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரியநாயக்கன்பாளையம் அருகேயுள்ள கொண்டசாமி நகரினை சார்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகளின் பெயர் கவுசிகா தேவி (வயது 22). இவர் அங்குள்ள கல்லூரியில் பயின்று வருகிறார். 

இதே பகுதியை சார்ந்த வழிபரொருவர் அங்குள்ள தனியார் பள்ளியில் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே நட்பு ரீதியிலான பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இந்த பழக்கமானது இவர்கள் இருவருக்கும் இடையே காதலாக மாறவே., இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர். மேலும்., காதலர்கள் இருவரும் அங்குள்ள பல இடங்களுக்கு சென்று தங்களின் காதலை வளர்ந்து வந்துள்ளனர். இந்த சமயத்தில்., இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. 

love,

இதன் காரணமாக இவர்கள் இருவரும் சந்தித்து பேசாமல் இருந்து வந்த நிலையில்., பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்த காதலன் தனது காதலிக்கு தொடர்பு கொண்டு பேச வேண்டும் என்று கூறியுள்ளார். 

இதனை ஏற்றுக்கொண்ட கவுசிகாவும் நேற்று மாலை காதலனை சந்திக்க சென்றுள்ளார். இவர்கள் இருவரும் அங்குள்ள பெரியநாயக்கன்பாளையம் அருகேயுள்ள வீரபாண்டி அருகே பேசியிருந்துள்ளனர். இந்த நேரத்தில் இவர்களுக்குள் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இந்த வாக்குவாதத்தின் காரணமாக மனமுடைந்த கவுசிகாதேவி இரயில்வே தண்டவாளத்திற்கு சென்றுள்ளார். இரவு 8 மணியளவில் அந்த தண்டவாளத்தில் வந்த  கோயம்புத்தூர் - நீலகிரி எக்ஸ்பிரஸ் இரயிலின் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துள்ளார். 

died, murder, suicide attempt, killed,

இந்த தற்கொலை முயற்சியில் இரயிலில் அடிபட்டு கவுசிகா தேவியின் உடல் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். பின்னர் இது தொடர்பாக பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.  

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர்., இரயில்வே காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்திருந்தனர். பின்னர் அங்கு வந்த இரயில்வே காவல்துறையினர் கவுசிகாதேவியின் உடலை கைப்பற்றி கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் தொடர்பாக இரயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Coimbatore love girl attempt suicide due to love problem


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->