இப்படித்தான் பெண்களை நான் ஏமாற்றினேன்.! கொடூரனிடம் இருந்து வாக்குமூலத்தை கேட்டு அதிர்ச்சியான காவல் துறையினர்.!! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டையை சார்ந்தவன் மகேந்திரவர்மன் (வயது 30). இவன் ஆசிரியர் பயிற்சி பயின்றுள்ளான். இவன் படித்து முடித்ததும் வேலை ஏதும் கிடைக்காததால்., விரக்தியடைந்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆவலில் அநீதியின் பக்கம் சென்று விரைந்து பணம் சம்பாதிக்க முடிவு செய்துள்ளான். 

இதற்கான முதற்கட்ட செயலாக பிரபல ஹிந்தி பாடகரான அர்மான் மாலிக் என்ற பெயரில் முகநூல் கணக்கை துவங்கி., அவரது இசை மற்றும் அழகான புகைப்படங்கள்., அவரது கணக்கில் பதிவு செய்யும் புகைப்படங்களை பதிவிறக்கம் செய்து., பின் தனது போலி முகநூல் பதிவில் பதிவு செய்துள்ளான். இதனை கண்ட இளம்பெண்களும்., போலி முகநூல் என்று தெரியாமல் லைக்குகளை குவித்துள்ளனர். 

இதனையடுத்து இவனின் பதிவிற்கு லைக் செய்த அனைத்து பெண்களுக்கும் தொடர்பு கொண்டு நட்பு வட்டாரத்திற்குள் வருமாறு அழைப்பு விடுக்கவே., பாடகர் தான் நட்பாக பழகுகிறார் என்ற எண்ணத்தில் பெண்களும் அமர்ந்துள்ளனர். இந்த நிலையில்., இவனிடம் பேசும் பெண்களிடம் ஆசை வார்த்தையை கூறி., திரைப்படத்துறையில் நடிக்க வாய்ப்புகள் ஏற்படுத்துகிறேன்., பாடகராக மாற்றுகிறேன் என்று ஆசை வார்த்தையை அள்ளி தெளித்துள்ளான். 

இதுமட்டுமல்லாது அவர்களின் வாட்சப் எண்ணையும் அறிந்து கொண்டு., அவர்களிடம் ஆசை வார்த்தைகளை கூறி தொடர்ந்து மயக்கி வந்துள்ளான். இவனது பேச்சில் நிலையறிந்து மயங்கிய பெண்கள்., இவனது அலைபேசி எண்ணிற்கு புகைப்படங்களை அனுப்பவே., தனது கொடூர எண்ணத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளான். 

பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து அவர்களுக்கு அனுப்பி நான் பாடகர் இல்லை என்றும்., ஒரு மோசடி நபர் என்றும்., நான் கேட்கும் பணத்தை தரவில்லை என்றால் இணையத்தில் ஆபாச புகைப்படத்தை பதிவு செய்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளான். 

இதனால் பதறிப்போன சுமார் 15 க்கும் மேற்பட்ட பெண்களிடம் இருந்து மொத்தமாக ரூ.50 இலட்சத்திற்கும் மேல் பெற்ற நிலையில்., கோயம்புத்தூர் மாவட்டம் சூலூரை சார்ந்த பெண் இவனது வலையில் சிக்கி., பின்னர் இவனது சுயரூபம் தெரிந்து., உடனடியாக காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்ததை அடுத்து., காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு கைது செய்துள்ளனர். 

சூலூர் பெண்ணை வைத்தே கொடூரனை தொடர்பு கொண்டு., அவனை பணம் வாங்குவதற்கு கோயம்புத்தூருக்கு வரச்சொல்லி பின்னர் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவன் வரும் சமயத்தில் எடுத்து வந்த மடிக்கணினியை சோதனை செய்ததில்., இவனால் ஏமாற்றம் மற்றும் துயருக்கு உள்ளான பெண்களின் விபரமும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவமானது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

இதுமட்டுமல்லாது இவனது நட்பு வட்டாரத்தில் இருக்கும் பெண்களிடம் ஆங்கிலத்தில் பேசி பீட்டர் விட்டு இந்த கொடூர செயலை அரங்கேற்றியதும் தெரியவந்துள்ளது. தற்போது இந்த கொடூரன் காவல் துறையினரின் விசாரணையில் உள்ளான். இவனை காவல் துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in coimbatore facebook fraud police investigation report


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->