சிறுமியின் வாழ்க்கையை சீரழித்து, நல்லவன் போல புகார்.. குடும்பத்தோடு சிக்கிய கணவன்..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மரக்கடை அருகேயுள்ள திருமால் வீதி பகுதியை சார்ந்தவர் அப்துல் சலாம். இவரது மனைவியின் பெயர் பர்சானா. இவர்களின் மகன் முகமது நிஷார் (வயது 28). இவர் அப்பகுதியில் செருப்புக்கடை வைத்து நடத்தி வருகிறார். 

முகமதுவிற்கு இவரது பெற்றோர்கள் முன்னிலையில், கடந்த வருடத்தின் ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி பொத்தனூரில் வைத்து திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இவர் 16 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளார்.

திருமணத்திற்கு பின்னர் இவர்கள் இருவரும் வசித்து வந்த நிலையில், சிறுமிக்கு திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை அருகேயுள்ள கல்லுப்பட்டி பகுதியை சார்ந்த கட்டிட தொழிலாளி ரஞ்சித்குமார் (வயது 23) என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இந்த பழக்கமானது இவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறவே, இவர்கள் இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். மேலும், அவ்வப்போது உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இந்த விஷயம் முகமது நிஷாருக்கு தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து முகமது நிஷார் இது தொடர்பாக கண்டித்த நிலையில், சிறுமி கடந்த 5 ஆம் தேதியன்று கள்ளக்காதலன் ரஞ்சித்துடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதன்பின்னர் தனது மனைவியை கண்டறிந்து தரக்கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இவரது புகாரை ஏற்ற காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், மனைவி என்று குறிப்பிடப்பட்ட பெண்மணிக்கு வயது 16 என்பதும், அவர் சிறுமி என்பதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து விஷயத்தை மகளிர் காவல் துறையினருக்கு தெரியப்படுத்தி சிறுமியை கடத்தி சென்ற ரஞ்சித் மற்றும் திருமணம் செய்த முகமது ஆகியோரையும் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் செய்தனர். மேலும், முகமதுவின் பெற்றோர்களையும் கைது செய்தனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Coimbatore child marriage and her life spoil police arrest culprits


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->